கயான் சிறிசோமவின் அதிரடி பந்துவீச்சினால் காலி அணி இன்னிங்ஸ் வெற்றி

91

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் ப்ரீமியர் லீக் தொடரின் B பிரிவுக்கான மூன்று போட்டிகள் இன்று (09) நிறைவடைந்தன. மூன்று நாட்கள் கொண்ட இந்த போட்டிகளில் காலி அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றதோடு மற்ற இரண்டு போட்டிகளும் வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றன.  

பாணந்துறை விளையாட்டு கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

கயான் சிறிசோமவின் மிரட்டும் பந்துவீச்சின் உதவியோடு பாணந்துறை விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் காலி அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

உள்ளூரில் பிரகாசித்த இவர்களுக்கு உலகக் கிண்ண வாய்ப்பு கிடைக்குமா?

பாணந்துரை எஸ்பலன்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறிசோம முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பாணந்துறை அணி 111 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 174 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய நிலையில் பாணந்துறை அணி 135 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 37 வயதான சிறிசோம 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். அதேபோன்று ரஜீவ வீரசிங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 111 (31.4) – காசிப் நவீட் 26*, அசந்த பஸ்னாயக்க 20, கயான் சிறிசோம 8/50

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 285 (58.5) – ஹர்ஷ விதான 75, அஷான் மதுஷங்க 39, சுராஜ் ரன்திவ் 38, கௌமல் நாணயக்கார 4/106, ஷெஹான் வீரசிங்க 3/69, இம்ரானுல்லாஹ் அஸ்லம் 2/61

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 135 (31.4) – திமிர ஜயசிங்க 33, ரஜீவ வீரசிங்க 5/42, கயான் சிறிசோம 4/43

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்களால் வெற்றி


புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கொழும்பு, பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் புளூம்பீல்ட் அணி துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய நிலையில் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது. புளூம்பீல்ட் அணியில் சச்சின் ஜயவர்தன (165) முதல் இன்னிங்ஸிலும் அசந்த சிங்கப்புலி (117) இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் பெற்றனர்.

போட்டியின் சுருக்கம்

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 385 (134.3) – சச்சின் ஜயவர்தன 165, மதூஷன் ரவிச்சந்திரகுமார் 61, தினுக்க ஹெட்டியாரச்சி 5/116, மஹேஷ் பிரியதர்ஷன 2/50

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 239 (75.5) – பவன் டயஸ் 73, சனத் ரஞ்சன 33, கீதான்ஷ் கேரா 30, மதூஷன் ரவிச்சந்திரகுமார் 6/76

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 266/5 (57) – அசந்த சிங்கப்புலி 117, கீஷாத் பண்டிதரத்ன 40, சுபுன் மதுஷங்க 2/28

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

திசர, திமுத்தின் சிறப்பாட்டங்களினால் கண்டி அணிக்கு ஆறுதல் வெற்றி

குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

குருநாகல், வெலகெதர மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஓட்ட மழை பொழிந்த நிலையில் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிந்தது.

குருநாகல் அணி முதல் இன்னிங்ஸுக்கு 509 ஓட்டங்களை பெற்ற நிலையில் விமானப்படை அணி இரண்டாவது இன்னிங்சுக்காக பலோ ஒன் (follow on) செய்தபோதும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி நெருக்கடியில் இருந்து தப்பியது. இந்தப் போட்டியில் இரு அணிகளிலும் மொத்தம் ஆறு சதங்கள் பதிவாகின.

Photos: Kurunegala Youth CC vs Air Force SC | SLC Major League 2018/19 – Tier “B”

போட்டியின் சுருக்கம்

குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ் – 509 (106) – துலாஜ் ரணதுங்க 163, ஷாலிக்க கருனானாயக்க 124, தமித் பெரேரா 106, தனுஷ்க மாலன் 45, உமேக சதுரங்க 4/133, நிமேஷ் மெண்டிஸ் 3/100, ரொஸ்கோ தட்டில் 2/74

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 334 (78.1) – சமிந்து லக்ஷான் 120, திலிப் தாரக்க 78*, உமேக சதுரங்க 51, லஹிரு ஜயரத்ன 4/69, தினுஷ்க மாலன் 2/34

விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – F/O 346/5 (60) – சாமிக்கர ஹேவகே 142*, ரொஸ்கோ தட்டில் 118, திலிப் தாரக்க 25*

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க