7 விக்கெட்டுகள் சாய்த்து அசத்திய அசித்த பெர்னாந்து

70

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), பிரிவு A கழகங்கள் இடையே நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட முதல்தர கிரிக்கெட் தொடரில் இன்று (22) ஐந்து போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் நிறைவுக்கு வந்தன. 

இன்றைய நாளுக்கான போட்டிகளில் இலங்கை உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது திறமைகளை வெளிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

வனிந்து ஹசரங்கவின் அபாரத்தால் இலங்கைக்கு த்ரில் வெற்றி

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும்……

உள்ளூர் போட்டிகளில் அசத்திய முதல் வீரராக லஹிரு மிலந்த மாறியிருந்தார். BRC அணிக்காக ஆடிவரும் லஹிரு மிலந்த சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிரான மோதலில் சதம் விளாசி 104 ஓட்டங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை, சோனகர் கிரிக்கெட் கழகத்திற்காக ஆடிவரும் தினுக்க டில்ஷான்  கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 118 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் இன்றைய நாளில் இரண்டாம் சதம் பெற்ற வீரராக மாறியிருந்தார். 

இதேநேரம், றாகம கிரிக்கெட் கழகத்திற்காக ஆடிவரும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான சமிந்த பெர்னாந்து 131 ஓட்டங்களை எடுத்து, இன்றைய நாளில் மூன்றாவது சதம் பெற்ற வீரராக ஆகியிருந்தார். 

இவர்கள் ஒருபுறமிருக்க பந்துவீச்சினை நோக்கும் போது இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பினைப் பெற்ற, சிலாபம் மேரியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அசித்த பெர்னாந்து 7 விக்கெட்டுக்களைச் சாய்த்து அசத்தல் பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருக்க இலங்கை டெஸ்ட் அணியின் சுழல் பந்துவீச்சாளரான டில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.   

சங்கக்காரவின் அரைச்சதத்தோடு மெரில்போன் கிரிக்கெட் கழகம் வெற்றி

பாகிஸ்தான் லாஹூர் நகரில் நேற்று (19) நடைபெற்ற முல்டான்……

இரண்டாம் நாள் போட்டிகளின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் கிரிக்கெட் கழகம் 

இடம் – சோனகர் கிரிக்கெட் கழக மைதானம், கொழும்பு

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 214 (71.3) – ஹேஷான் தனுஷ்க 49, சத்துர ரன்துனு 4/30

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 264 (97.4) – தினுக்க டில்சான் 118, டில்ருவான் பெரேரா 4/76, பிரபாத் ஜயசூரிய 3/82

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 49/0 (9)


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இடம் – சர்ரே மைதானம், மக்கோன

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 229 (73) – மலிங்க அமரசிங்க 76, சமிகார எதிரிசிங்க 4/61, மொஹமட் டில்சாட் 3/65

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 331/8 (94) – நவிந்து நிர்மல் 81, மிலிந்த சிறிவர்தன 69, சானக்க ருவன்சிரி 3/56


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

இடம் – மேரியன்ஸ் மைதானம், கட்டுநாயக்க

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 206 (51.5) -திக்ஷில டி சில்வா 119*, லஹிரு சமரக்கோன் 5/86

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 326 (91.5) – லஹிரு மிலன்த 104, தமித் பெரேரா 53, அசித்த பெர்னாந்து 7/139

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 81/2 (24) 


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

இடம் – BRC மைதானம், கொழும்பு

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 142 (43) – லசித் அபேரத்ன 59, ரொஷேன் பெர்னாந்து 3/22

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 141 (35.5) – பசிந்து லக்ஷன்க 43, அஷான் பிரியஞ்சன் 24/6, மலிந்த புஷ்பகுமார 4/58

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 369 (79.2) – அஷான் பிரியஞ்சன் 84, சோனால் தினுஷ 75*, லக்ஷித ரசஞ்சன 5/126

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 65/0 (15)


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

இடம் – NCC மைதானம், கொழும்பு

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 421 (101.2) – மனோஜ் சரசந்திர 114, ரன்மித் ஜயசேன 89, கித்ருவான் விதானகே 77, அமில அபொன்சோ 3/103

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 261/3 (76) – சமிந்த பெர்னாந்து 131*, ரொஷேன் சில்வா 51, மதுக்க லியனபத்திரனகே 2/84

இன்று ஆரம்பமான போட்டிகள் அனைத்தினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<