வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற மென்சஸ்டர் யுனைடட், லிவர்பூல் போட்டி

90
Image Courtesy - Getty Images

லிவர்பூல் அரங்கில் நடைபெற்ற மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியை லீவர்பூல் அணி வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தது. இரு அணிகளதும் முக்கிய வீரர்கள் இப்போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லிவர்பூல் கால்பந்து கழகத்தின் அரங்கமான அன்பீய்ல்ட் (Anfield) அரங்கில் நடைபெற்ற மென்சஸ்டர் யுனைடட் மற்றும் லிவர்பூல் கழகங்களிற்கிடையிலான போட்டியானது இரு அணியினதும் பாரிய போராட்டத்தின் பின் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. மென்சஸ்டர் யுனைடட் அணியின் மருவானே பெய்லானீ (Maruane Felliani) பெவ்ல் போக்பா (Paul Pogba) மற்றும் லிவர்பூல் அணியின் ஸடீயோ மனேய் (Sadio Mane) ஆகியோர் போட்டித்தடை மற்றும் உபாதை காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை.

போட்டியை ஆரம்பித்த லிவர்பூல் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள பலம் மிக்க மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு இறுதி நிமிடம் வரை சவால்விடுத்தது. அதற்கேற்றாற்போல் லிவர்பூல் அணியின் சிறந்த பந்து பரிமாற்றங்களை தடுப்பதற்காக போட்டியின் அதிகமான நேரம் மென்சஸ்டர் யுனைடட் அணி பந்தை தடுத்தாடும் பணியில் ஈடுபட்டது.

போட்டி ஆரம்பமாகி ஆறு நிமிடங்கள் கடந்ததன் பின்னர் ஸ்மேலீங் மூலம் லிவர்பூல் அணி தனது முதல் முயற்சியை மேற்கொண்டது. எனினும் அம்முயற்சியானது மென்சஸ்டர் யுனைடட் அணியின் கோல்காப்பாளர் மூலம் இலகுவாக கைப்பற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போட்டியின் 13 ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் மூலம் மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு மீண்டும் சவால் விடுக்கப்பட்டது. எனினும் மென்சஸ்டர் யுனைடட் அணியால் தனது முதல் முயற்சியை 23 ஆவது நிமிடத்தில் மேற்கோள்ள முடிந்தது. என்றாலும் அதனை வெற்றிகரமான முயற்சியாக குறிப்பிட முடியாது.

சர்வதேச போட்டிகளுக்கு விடை கொடுக்கும் ஆயன் ரொபென்

அதனைத் தொடர்ந்து மீண்டும் போட்டியின் 30 ஆவது நிமிடத்தில் எதிரணியின் பெனால்டி எல்லைக்கு அருகாமையில் மத்தியகளத்திலிருந்து மெடிக் (Matic) மூலம் லிவர்பூல் அணியின் கோலை நோக்கி உதையப்பட்ட பந்தானது, கோல் கம்பங்களையும் தாண்டிச் சென்றது.

போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணி போட்டியில் முன்னிலை பெற எடுக்கப்பட்ட முயற்சியானது மென்சஸ்டர் யுனைடட் அணியின் கோல் காப்பாளரின் சிறப்பாட்டத்தால் தடுக்கப்பட்டது. பெனால்டி எல்லையின் இடது பக்கத்திலிருந்து பெர்மீனோ (Firmino) மூலம் பின்கள வீரர்களையும் தாண்டி தரை வழியாக உள்ளனுப்பப்பட்ட பந்தை லிவர்பூல் அணியின் பின்கள வீரர் மெடிப் (Matip) உள்ளனுப்ப முயன்றபோது மென்சஸ்டர் யுனைடட் அணியின் கோல் காப்பாளர் தனது காலால் தடுத்தார்.

எதிரணியின் தொடாரான சவால்களுக்கு பதிலாக போட்டியின் 42 ஆவது நிமிடத்தில் லுகாகு மற்றும் மெடிக்கிற்கு இடையிலான சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின்னர் லுகாகு மூலம் மேற்கோள்ளப்பட்ட முயற்சியே முதற்பாதியின் இறுதி முயற்சியாக அமைந்தது. சிறந்த பந்து பரிமாற்றத்தின் பெனால்டி எல்லையின் இடதுபக்கத்தின் மத்தியகளத்திலிருந்து வேகமாக லுகாகு மூலம் உதையப்பட்ட பந்தை லிவர்பூல் அணியின் கோல்காப்பாளர் சிறந்த முறையில் தடுத்தார். அத்துடன் முதற்பாதி நிறைவுற்றது.

போட்டியின் இரண்டாம் பாதியில் அதிகமான முயற்சிகள் லிவர்பூல் அணி மூலமே மேற்கொள்ளப்பட்டது. எனினும் மென்சஸ்டர் யுனைடட் அணி மூலம் இரண்டாம் பாதியில் வெற்றிகரமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாதியின் பல முயற்சிகள் லிவர்பூல் அணி மூலம் மேற்கொள்ளப்பட்ட போதும், வெற்றிகரமான முயற்சிகளாக போட்டியின் 55 மற்றும் 70 ஆவது நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைக் குறிப்பிடலாம்.

55 ஆவது நிமிடத்தில் கோமெஸ் (Gomez) மூலம் மத்தியகளத்தின் வலது பக்கத்திலிருந்து பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை கேன் (Can) தனது காலால் தட்டி கோலாக்க முயன்றார் எனினும் பந்தானது கோல் கம்பங்களிற்கு மேலால் சென்றது.

77 ஆவது நிமிடத்தில் எடுக்கப்பட்ட முயற்சியின் போது கெடீய்னோ (Coutinho) மூலம் பெனால்டி பெட்டியின் இடது பக்கத்திலிருந்து ஸலாஹ்வை (Salah) நோக்கி உள்ளனுப்பட்ட பந்தை, ஸலாஹ் தனது தலையால் முட்டி கோலாக்க முயன்றார். எனினும் பந்தானது கோல் கம்பங்களிற்கு சற்று மேலால் சென்றது.

போட்டியின் இரு பாதியிலும் அதிகமான வாய்ப்பைப் பெற்ற லிவர்பூல் அணியால் மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு எதிராக ஓரு கோலையேனும் பெற முடியாமல் போனது சற்று ஏமாற்றமாகவே அமைந்தது. எனினும் போட்டியின் இறுதிவரை ரசிகர்களின் ஆதரவு லிவர்பூல் அணிக்கு கிடைத்த வண்ணமே இருந்தது.