15 வருட இலங்கை சாதனையை முறியடித்த ஹிருனி

126

அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேயரத்ன அமெரிக்காவின் ஒரிகோன் மாநிலத்தில் இடம்பெற்ற போர்ட்லேன்ட் சுவட்டு நிகழ்ச்சியில் (Portland track festival) பங்குகொண்டு பெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளுக்கான இலங்கை சாதனையை முறியடித்தார்.   

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கைக்கு மேலும் இரு பதக்கங்கள்

ஜப்பானின் கிபு நகரின்…

நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் பங்கேற்றிருந்த ஹிருனி, போட்டியை 33 நிமிடங்கள் 55.06 செக்கன்களில் ஓடி முடித்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டியிருக்கின்றார்.   

முன்னதாக 2003ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் சுஜீவா நில்மினி ஜயசேன, 33 நிமி. 57.96 செக்கன்களில் ஓடிமுடித்து நிலைநாட்டிய சாதனையை 15 வருடங்களுக்குப் பிறகு ஹிருனி விஜேரத்ன முறிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியின் பிறகு ஹிருனி கருத்து வெளியிடுகையில், 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த இலங்கை சாதனையை முறியடிக்க கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. எனவே, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவிலும் 10,000 மீற்றரில் இலங்கைக்காக ஓடி பதக்கமொன்றைப் பெற்றுக்கொள்ள ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்ற ஹிருனி விஜேயரத்ன 2017 இல் லண்டனில் இடம்பெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் முதல் தடவையாக இலங்கையை பிரதிநிதித்துவம் செய்திருந்தார்.

கடந்த ஓக்டோபரில் நீண்ட கால இடைவெளி ஒன்றின் பின்னர் இலங்கை வந்திருந்த ஹிருனி, கொழும்பில் இடம்பெற்றிருந்த எல்.எஸ்.ஆர் (LSR) அரை மரதன் தொடரில் பங்கேற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.  

இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் ஹூஸ்டனில் நடைபெற்ற மரதன் ஓட்டத் தொடரில் புதிய தேசிய சாதனையை நிலை நாட்டியிருந்த ஹிருனி, அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பினையும் பெற்றுக் கொண்டார்.

எனினும், பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதற்தடவையாக பங்குபற்றிய அவர், கடுமையான வெயிலுக்கு மத்தியில், போட்டியை 2 மணித்தியாலமும் 49.38 செக்கன்களில் நிறைவு செய்து 11ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<