மேற்கிந்திய தீவுகள் அதிரடி வீரர் நிகொலஸ் பூரனுக்கு அபாராதம்

239

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு அதிரடித் துடுப்பாட்ட வீரரான நிகொலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்  (ICC) ஒழுக்கவிதிமுறைகளை மீறியமைக்கான அபராதத்திற்கு உள்ளாகியுள்ளார்.  

ஹஸன் அலியின் வேகத்துடன் ஜப்னாவை வீழ்த்திய தம்புள்ள ஓரா

இந்தியாமேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையில் நடைபெற்ற இரண்டாவது T20I போட்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றினை பொதுவெளியில் விமர்சனம் செய்ததன் அடிப்படையிலேயே நிகொலஸ் பூரன் குற்றவாளியாக இனம் காணப்பட்டுள்ளார். அதன்படி பூரன் ICC இன் கிரிக்கெட் வீரர்களுக்கான ஒழுக்க கோவை 2.7 இன் சரத்தினை மீறி குற்றம் மேற்கொண்டதாக இனம் காணப்பட்டிருப்பதோடு, அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 15% அபராதமாகவும் வழங்கப்பட்டிருக்கின்றது 

இந்தியமேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டியில் மேன்முறையீடு செய்யப்பட்ட தீர்ப்பொன்று குறித்து பொதுவெளியில் விமர்சனம் மேற்கொண்டதே பூரன் மேற்கொண்டிருந்த குற்றமாக கூறப்படுகின்றது 

அதேநேரம் குறித்த தவறினை மேற்கொண்டமைக்காக பூரனுக்கு நன்னடத்தை விதிமீறல் புள்ளியொன்றும் வழங்கப்பட்டிருப்பதோடு, பூரான் மேற்கொண்ட தவறானது நிலை I (Level 1) இற்குள் அடங்குவதாகவும் இருக்கின்றது. நிகொலஸ் பூரன் தனது தவறினை ஒப்புக் கொண்டிருப்பதோடு, அபராதத்தினை ஏற்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார் 

மறுமுனையில் மேற்கிந்திய தீவுகள் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது T20I போட்டியில் 02 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது 

இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது T20I போட்டியில் வெற்றி பெற காரணமாக அமைந்திருந்த நிகொலஸ் பூரன் அரைச்சதம் (67) விளாசி இருந்ததோடு, போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தியாமேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான மூன்றாவது T20I போட்டி இன்று கயானா நகரில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது 

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<