டயலொக் ரைசிங் ஸ்டார்ஸ் வலைப்பந்தாட்ட சம்பியனாகிய மேல் மாகாணம்

137
Dialog Netball Rising Stars 2021

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான டயலொக் ரைசிங் ஸ்டார்ஸ் 2021 வலைப்பந்தாட்ட  தொடரின் சம்பியன் கிண்ணத்தை மேல் மாகாண அணி வெற்றிக்கொண்டது.

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆஸியாட்டா (பிரைவட்) லிமிடெட் நிதியுதவி அளித்து, மார்ச் 7ம், 8ம் திகதிகளில் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனமும், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முழு மேற்பார்வையிலும் இந்தப்போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டது. இளம் வீராங்கனைகளை கண்டறிவதை முன்னிட்டு, இந்தப் போட்டி தொடர் நடத்தப்பட்டது.

>> Sports Vision இல் பயன்படும் பயிற்சி முறைகள்

தொடரில் மொத்தமாக 9 மாகாணங்களை முன்னிறுத்தி 9 அணிகள் பங்கேற்றதுடன், அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டது. குழுநிலை போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்துக்கொண்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கு மேல் மாகாணம் மற்றும் வட மேல் மாகாண அணிகள் தகுதிபெற்றன.

இறுதிப்போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய மேல் மாகாண அணி 23-9 என்ற புள்ளிகள் கணக்கில் வடமேல் மாகாண அணியை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டது.

குழு விபரம் 

A குழு – ஊவா மாகாணம், வட மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், வட மாகாணம்

B குழு – சப்ரகமுவ மாகாணம், மேல் மாகாணம், கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம்

இந்த தொடரில் பிரதான நிகழ்வை தவிர்த்து, பாஸ்ட்5 (Fast5) என்ற முன்னணி தேசிய வீராங்கனைகளை உள்ளடக்கி கண்காட்சி போட்டியொன்று நடைபெற்றது. சாதாரணமாக வலைப்பந்தாட்ட போட்டிகளில் 7 வீராங்கனைகள் விளையாடினாலும், பாஸ்ட்5 போட்டியில் அணிக்கு தலா 5 வீராங்கனைகள் மாத்திரமே விளையாடுவர் என்பதுடன், போட்டி மிகவும் சுவாரஷ்யமாக அமைந்திருந்தது.

அதேநேரம், டயலொக் ரைசிங் ஸ்டார்ஸ் 2021  போட்டித் தொடரில், சம்பியனாகிய அணிக்கு 50 ஆயிரம் ரூபா பரிசாக வழங்கப்பட்டதுடன், இரண்டாவது இடைத்தை பிடித்த அணிக்கு 20 ஆயிரம் ரூபா பரிசாக வழங்கப்பட்டது.

வெற்றியாளர்கள் விபரம்

  • சம்பியன் – மேல் மகாணம்
  • இரண்டாவது இடம்வடமேல் மாகணம்
  • சிறந்த வீராங்கனைதருசி தத்சரணி (ஊவா மாகாணம்)

முழுமையான விபரம்

முதல் சுற்று – குழு A

  • ஊவா மாகாணம் 43 – 05 வட மத்திய மாகாணம்
  • வடமேல் மாகாணம் 30 – 17 வட மாகாணம்
  • ஊவா மாகாணம் 15 – 32 வடமேல் மாகாணம்
  • வட மத்திய மாகாணம் 10 – 22 வட மாகாணம்
  • ஊவா மாகாணம் 42 – 12 வட மாகாணம்
  • வட மத்திய மாகாணம் 08 – 42 வடமேல் மாகாணம்

முதல் சுற்று – குழு B

  • சப்ரகமுவ மாகாணம் 08 – 29 மேல் மாகாணம்
  • கிழக்கு மாகாணம் 25 – 20 மத்திய மாகாணம்
  • தென் மாகாணம் 16 – 13 சப்ரகமுவ மாகாணம்
  • மேல் மாகாணம் 34 – 13 கிழக்கு மாகாணம்
  • மத்திய மாகாணம் 13 – 31 தென் மாகாணம்
  • சப்ரகமுவ மாகாணம் 17 – 14 கிழக்கு மாகாணம்
  • மேல் மாகாணம் 33 – 06 மத்திய மாகாணம்
  • தென் மாகாணம் 32 – 20 கிழக்கு மாகாணம்
  • சப்ரகமுவ மாகாணம் 13 – 17 மத்திய மாகாணம்
  • மேல் மாகாணம் 30 – 12 தென் மாகாணம்

அரையிறுதி

  • வடமத்திய மாகாணம் 34 – 33 தென் மாகாணம்
  • ஊவா மாகாணம் 13 – 40 மேல் மாகாணம்

மூன்றாவது இடம்

  • தென் மாகாணம் 38 – 28 ஊவா மாகாணம்

இறுதிப்போட்டி

  • வடமேல் மாகாணம் 9 – 23 மேல் மாகாணம்

>> மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க <<