தனது ஆறு சிக்ஸர்கள் பற்றி கருத்து வெளியிட்டிருக்கும் கீய்ரோன் பொலார்ட்

521

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் போட்டி நேற்று (04) என்டிகுவா நகரில் நிறைவுக்கு வந்திருந்தது. 

அகில ஹெட்ரிக்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிய பொல்லார்ட்

இலங்கையின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ஒரு அங்கமாக அமையும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த T20 தொடரின் முதல் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்ததுடன் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. 

இப்போட்டியின் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கீய்ரோன் பொலார்ட், T20 சர்வதேச போட்டிகள் வரலாற்றில் ஓவர் ஒன்றுக்கு தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்கள் விளாசிய இரண்டாவது வீரராக சாதனை படைத்திருந்ததோடு, மொத்தமாக 38 ஓட்டங்களுடன் தனது தரப்பு வெற்றியினையும் உறுதி செய்து ஆட்டநாயகனாகவும் தெரிவாகினார்.

கீய்ரோன் பொலார்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸின் 06ஆவது ஓவரில், அகில தனன்ஞய வீசிய அனைத்துப் பந்துகளையும் மைதான எல்லைகளுக்கு அப்பால் விளாசி, T20 சர்வதேச போட்டிகள் வரலாற்றில் ஓவர் ஒன்றுக்கு தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்கள் விளாசியே இந்த சாதனையினை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில் இப்போட்டியில், அகில தனன்ஞய பொலாரட்டிற்கு இரண்டாம் இன்னிங்ஸின் 06ஆவது ஓவரினை வீச முன்னர் ஹட்ரிக் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி போட்டியின் திருப்பத்தினையும் மாற்றியிருந்தார். 

இதனால், பாரிய அழுத்தங்களுக்கு மத்தியிலேயே கீய்ரோன் பொலார்ட், அகில தனன்ஞயவின் பந்துவீச்சினை எதிர்கொண்டு ஆறு பந்துகளுக்கு தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களினை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பெதும் நிஸ்ஸங்கவின் திறமையைக்கண்டு வியக்கும் மிக்கி ஆர்தர்!

தான் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்கள் விளாசிய விடயம் தொடர்பில், கீய்ரோன் பொலார்ட் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். 

”நான் மூன்றாவது பந்தில் சிக்ஸர் ஒன்றினை விளாசிய பின்னர், என்னால் ஆறு பந்துகளுக்கும் ஆறு சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்பதனை உணர்ந்தேன். தொடர்ந்து, ஐந்தாவது பந்தில் சிக்ஸர் விளாசப்பட்டதனை அடுத்து நான் பந்துவீச்சாளரை பின்னடைய வைத்திருப்பதனை அவதானிக்க முடிந்தது. தொடர்ந்து அவர் விக்கெட்டினை சுற்றி பந்துவீச வந்தார். அது அவருக்கு கடினமான ஒன்று. அப்போது தான் ஆறாவது சிக்ஸருக்கு செல்வோம் எனக்குள் கூறிக்கொண்டேன்.”

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான யுவராஜ் சிங், 2007ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் ப்ரோட்டின் பந்துவீச்சுக்கு எதிராக ஓவரின் ஆறு பந்துகளுக்கும் ஆறு சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

யுவராஜ் சிங் தவிர, ஒருநாள் போட்டிகளில் தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரர் ஹெர்ஷல் கிப்ஸ் 2007ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் நெதார்லாந்து அணியின் பந்துவீச்சாளர் டான் வான் பாங்கேவின் பந்துவீச்சுக்கு எதிராக ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்கள் விளாசியது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் ஆறு பந்துகளுக்கு வீரர் ஒருவர் ஆறு சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசிய மற்றைய சம்பவமாக பதிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<