சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ஐ.சி.சி.), பாகிஸ்தான் கிரிக்கெட் சபை போட்டி மத்தியஸ்தர் அன்டி பைக்ரோப்ட் தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாடானது நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>ஹொங்கொங் வெற்றியுடன் சுப்பர் 4 வாய்ப்பை பலப்படுத்திய இலங்கை<<
இந்திய – பாகிஸ்தான் அணிகள் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்று முடிந்திருந்த ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டியின் பின்னர் இந்திய வீரர்கள், பாகிஸ்தானுடன் கைகுலுக்காமல் (Hand Shake) சென்ற நிகழ்வு சர்ச்சையினைத் தோற்றுவித்திருந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில், ஐ.சி.சி. இடம் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட அன்டி பைக்ரோப்ட் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை புகார் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதாவது குறிப்பிட்ட மத்தியஸ்தர் அணியொன்றுக்கு ஆதரவாக ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டதாக தெரிவித்தே பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது ஐ.சி.சி. இடம் முறைப்பாடு மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
எனினும் இந்தியாவின் செய்தி இணையதளமான கிரிக்பஸ் (Cricbuzz) வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், போட்டி மத்தியஸ்தரான அன்டி பைக்ரோப்டை ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து நடுவரினை இடைவிலக்கும் கோரிக்கையை நிராகரிக்கவுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான அறிவிப்புக்கள் காலக்கிரமத்தில் வெளியிடப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<