இங்கிலாந்து அணிக்கு எண்டர்சன், ஸ்டோக்ஸ், ரஷீத் மீளஅழைப்பு

246
James Anderson, Ben Stokes, Adil Rashid

லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களான ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

இதனால் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய பந்து வீச்சினால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் டெஸ்டில் தோல்வியடைந்ததால், 2ஆவது டெஸ்டுக்கான 14 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜேம்ஸ் எண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷிதும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் எண்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளதால் முதல் டெஸ்டில் இடம்பிடித்த ஜேக் போலுக்கு இடம் கிடைக்காது என்று தெரிகிறது. ஒருவேளை மொயீன் அலி நீக்கப்பட்டால் லெக் ஸ்பின்னர் ஆதில் ரஷித் அணியில்  சேர்க்கப்படலாம்.

பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளதால் கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட வேண்டும். ஆனால், கிறிஸ் வோக்ஸ் லோர்ட்ஸ் டெஸ்டில் 11 விக்கட்டுகளை வீழ்த்தினார். இதனால் 2ஆவது டெஸ்டுக்கான, விளையாடும்  11 வீரர்களைத் தெரிவு செய்வதில் இங்கிலாந்து அணிக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்