முன்னணி வீரரை இழக்கும் சென்னை சுபர் கிங்ஸ்!

IPL 2024

63
Devon Conway

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக இம்முறை ஆரம்ப போட்டிகளில் டெவோன் கோன்வே விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு IPL தொடரின் இறுதிப்போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதினை டெவோன் கொன்வே வென்றிருந்தார். எனினும் இம்முறை மே மாதம் வரை இவரால் போட்டிகளில் விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

>> ஹசரங்க, பெதும் நிஸ்ஸங்க இல்லாதது புதிய வாய்ப்பு – கிறிஸ் சில்வர்வூட்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இறுதியாக நடைபெற்ற T20i தொடரின் போது டெவோன் கொன்வேயில் பெருவிரல் பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்தது.

குறித்த உபாதைக்கு இந்த வாரத்தில் டெவோன் கொன்வே சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரால் தொடர்ந்து 8 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL தொடர் இம்மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் டெவோன் கொன்வே முதற்பாதி போட்டிகளை தவறவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்முறை IPL தொடரின் முதல் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<