வெற்றியோடு தொடரைத் தொடங்கியது இங்கிலாந்து

238
Pak v Eng 1st ODI
@Getty Image

பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் 1ஆவது போட்டி நேற்று சௌதாம்ப்டன் ரோஸ் பௌல் மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

இதன் படி ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 260 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அணியின் தலைவர் அசார் அலி 82 ஓட்டங்களையும், சர்ப்ராஸ் அஹமத் 55 ஓட்டங்களையும், பாபர் அசாம் 40 ஓட்டங்களையும் பெற்று இருந்தனர். இங்கிலாந்து அணியின் சார்பாகப் பந்துவீச்சில் ஆதில் ரஷீத் 2 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

பின்னர் 261 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.3 ஓவர்களில் 3 விக்கட்டுகள் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று இருந்த நிலையில் போட்டியில் மழை குறுக்கிட்டது. இந்த மழை தொடர போட்டியின் வெற்றி டக்வத் லுயிஸ் முறை மூலம் இங்கிலாந்துக்கு வழங்கப்பட்டது. அதன் படி இங்கிலாந்து அணி டக்வத் லுயிஸ் முறை மூலம் 44 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேசன் ரோய் 65 ஓட்டங்களையும், ஜோ ரூட் 61 ஓட்டங்களையும் இயோன் மோர்கன் ஆட்டம் இழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் ஆட்ட நாயகனாக ஜேசன் ரோய் தெரிவு செய்யப்பட்டார். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 260/6 (50)
தலைவர் அசார் அலி 82, சர்ப்ராஸ் அஹமத் 55, பாபர் அசாம் 40
ஆதில் ரஷீத் 51/2, ஜோ ரூட் 26/1

இங்கிலாந்து – 194/3 (34.3)
ஜேசன் ரோய் 65, ஜோ ரூட் 61, இயோன் மோர்கன் 33*
முஹமத் நவாஸ் 31/1

இங்கிலாந்து அணி டக்வத் லுயிஸ் முறை மூலம் 44 ஓட்டங்களால் வெற்றி