டோனியின் தலைமைத்துவத்தை கடுமையாக விமர்சித்த கம்பீர்

225
IPLT20.COM

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியை பொருத்தவரையில், சென்னை அணியின் பக்கமிருந்து அதிகமாக கேள்வியை உருவாக்கிய விடயம், அந்த அணியின் தலைவரான மகேந்திரசிங் டோனி 7வது இடத்தில் களமிறங்கி துடுப்பெடுத்தாடியமை.

IPL தொடரிலிருந்து விலகும் மிட்செல் மார்ஷ்? 

முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 217 என்ற மிகப்பெரிய வெற்றியிலக்கினை நிர்ணயித்திருந்த போதும், அதற்கான சரியான பதிலடியை சென்னை அணி கொடுக்க தவறியிருந்தது. குறிப்பாக ஆரம்பத்தில் சென்னை அணி மந்தமான முறையில் ஓட்டங்களை குவித்ததுடன், போட்டியின் வெற்றியிலக்கை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. 

குறிப்பாக, சென்னை அணி 38 பந்துகளுக்கு  103 ஓட்டங்களை பெறவேண்டிய கட்டாயத்தில், டோனி 7வது துடுப்பாட்ட வீரராக களமிறங்கியிருந்தமை தவறான கணிப்பு என இரண்டு முறை ஐ.பி.எல். கிண்ணம் வென்ற தலைவரான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

“செம் கரன், ருதுராஜ் கய்கவட் ஆகியோரை தனக்கு முதலில் களமிறக்கி, டோனி 7வது துடுப்பாட்ட வீரராக களமிறங்கியமை உண்மையில் ஆச்சரியமளிக்கிறது. இவ்வாறு களமிறக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. அணித்தலைவர் அணியை முன்னின்று வழிநடத்த வேண்டும். இது அணியை வழிநடத்தும் விதமல்ல. 217 என்ற மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை அடையவேண்டும் என்ற நிலையில், 7வது துடுப்பாட்ட வீரராக களமிறங்கினால் ஆட்டம் முடிந்துவிடும். பெப் டு ப்ளெசிஸ் தனியொருவராக போராடினார்.

ஆம். மகேந்திரசிங் டோனி கடைசி ஓவரில் விளாசிய மூன்று சிக்ஸர்கள் தொடர்பில் பேசலாம். ஆனால், உண்மையில் அந்த ஆறு ஓட்டங்களில் எந்த பயனும் இல்லை. அவை டோனி தனக்காக பெற்றுக்கொண்ட ஓட்டங்கள்” என கம்பீர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், துடுப்பாட்ட வீரரான ஒரு தலைவர் 7வது துடுப்பாட்ட வீரராக இதுபோன்ற சந்தர்ப்பத்தில் களமிறங்கினால், அவர் கடுமையான விமர்சனத்தை சந்தித்திருப்பர். ஆனால், டோனி என்பதால் மக்கள் இதுதொடர்பில் பேசவில்லை. 

Video – டோனி, கோஹ்லி, டிவில்லியர்ஸின் முத்தான சாதனைகள் |Sports RoundUp – Epi 133

சுரேஸ் ரெய்னா போன்ற வீரர் ஒருவர் அணியில் இல்லாத நிலையில், செம் கரன் போன்ற வீரர், டோனியை விட சிறந்தவர் என காட்ட முனைகின்றனர். அதேநேரம், ருதுராஜ் கய்கவட், செம் கரன், கேதர் ஜாதவ், பெப் டு ப்ளெசிஸ் மற்றும் முரளி விஜய் ஆகியோர் டோனியை விட சிறந்த வீரர்கள் என மக்களை நம்பச் செய்யும் செயற்பாடாகவே இது உள்ளது” என டோனி 7வது துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கம்பீர் விமர்சித்துள்ளார்.

எவ்வாறாயினும், அணியில் உள்ள வளத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் நோக்கத்துக்காகவும், வீரர்களின் திறமையை அறிந்துக்கொள்ளும் முகமாகவுமே டோனி இவ்வாறு களமிறங்கினார் என அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்டீவன் ப்ளமிங் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<