இலங்கை – பாகிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

Pakistan tour of Sri Lanka 2023

422

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் 2023-25 பருவகாலத்துக்கான இலங்கை அணியின் முதல் தொடரான இந்த தொடர் அடுத்த மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஜிம்பாப்வேயில் இலங்கை அணியுடன் இணையும் இளம் வீரர்கள்

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் 09ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது. பாகிஸ்தான் அணி இலங்கையை வந்தடைந்த இரண்டு நாட்களில் (11ஆம் திகதி) 2 நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியொன்றில் விளையாடவுள்ளது.

அதனைத்தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை  16ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக இரண்டு அணிகளும் கொழும்பு வருகைத்தரவுள்ளதுடன் ஜூலை 24 முதல் ஜூலை 28ஆம் திகதிவரை இரண்டாவது போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டி அட்டவணை

  • ஜூலை 16-20 – முதல் டெஸ்ட் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • ஜூலை 24-28 – இரண்டாவது டெஸ்ட் போட்டி – எஸ்.எஸ்.சி மைதானம்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<