Home Tamil அப்துல்லா சபீக்கின் இரட்டைச்சதத்தோடு வலுவான நிலையில் பாகிஸ்தான்

அப்துல்லா சபீக்கின் இரட்டைச்சதத்தோடு வலுவான நிலையில் பாகிஸ்தான்

237

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் பாகிஸ்தான் அணியானது அப்துல்லா சபீக்கின் அபார இரட்டைச்சத உதவியோடு வலுவான நிலையை அடைந்திருக்கின்றது.

>>இரண்டாவது டெஸ்டில் இருந்து நீங்கும் சர்பராஸ் அஹ்மட்

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறும் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று மழையினால் கைவிடப்படும் போது தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த பாகிஸ்தான் 178 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த அப்துல்லா சபீக் 87 ஓட்டங்களையும், பாபர் அசாம் 28 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இன்று போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கையை விட 12 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் ஆரம்பம் முதலே சிறப்பாக செயற்பட்டிருந்தது.

பாகிஸ்தான் அணிக்காக ஆரம்பத்தில் அப்துல்லா சபீக் சதம் விளாசி தனது தரப்பினை பலப்படுத்தினார். பின்னர் இன்றைய நாளில் முதல் விக்கெட்டாக பாகிஸ்தான் தலைவர் பாபர் அசாம் பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து சென்றார். அவர் ஆட்டமிழக்கும் போது 04 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 39 ஓட்டங்கள் பெற்றதோடு, மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 89 ஓட்டங்களையும் அப்துல்லா சபீக்குடன் இணைந்து பகிர்ந்தார்.

இதன் பின்னர் செளத் சகீல் களம் வந்து களம் வந்ததோடு அவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற 7ஆவது அரைச்சதத்துடன் பாகிஸ்தான் தரப்பினை பலப்படுத்தினார். பின்னர் செளத் சக்கீலின் விக்கெட் அவர் 57 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அசித பெர்னாண்டோவின் பந்துவீச்சில் பறிபோனது. செளத் சகீல் பாகிஸ்தானின் 4ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 109 ஓட்டங்களைப் பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

செளத் சகீலின் பின்னர் புதிய துடுப்பாட்டவீரராக வந்த சர்பராஸ் அஹ்மட் தலை உபாதை (Concussion) காரணமாக 14 ஓட்டங்களுடன் வெளியேற புதிய துடுப்பாட்டவீரராக அகா சல்மானுடன் இணைந்து அப்துல்லா சபீக் பாகிஸ்தான் தரப்பினை வலுப்படுத்தியதோடு நான்காம் நாளின் தேநீர் இடைவேளையின் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய கன்னி இரட்டைச்சதத்தினையும் பூர்த்தி செய்தார்.

பின்னர் அப்துல்லா சபீக்கின் விக்கெட் பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் பறிபோனது. அப்துல்லா சபீக் 19 பெளண்டரிகள் மற்றும் 04 சிக்ஸர்கள் அடங்கலாக 201 ஓட்டங்கள் எடுத்தார்.

>>ஸ்டம்பினை தாக்கிய இந்திய அணித் தலைவிக்கு போட்டித் தடை

அப்துல்லா சபீக்கின் பின்னர் மீண்டும் அகா சல்மானின் சதத்தோடு பலம் பெற்ற பாகிஸ்தான் அணியானது நான்காம் நாள் ஆட்டநிறைவில் 132 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 563 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் காணப்படுகின்றது.

தற்போது இலங்கையை விட 397 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் அகா சல்மான் 132 ஓட்டங்களையும், சர்பராஸ் அஹ்மட்டின் பிரதியீட்டு வீரராக களம் வந்த மொஹமட் ரிஸ்வான் 37 ஓட்டங்களையும் பெற்று காணப்படுகின்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 03 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
166/10 (48.4) & 188/10 (67.4)

Pakistan
576/5 (134)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka run out (Shan Masood) 4 9 1 0 44.44
Dimuth Karunaratne b Naseem Shah 17 37 3 0 45.95
Kusal Mendis c Mohammad Rizwan b Shaheen Shah Afridi 6 9 1 0 66.67
Angelo Mathews c Sarfaraz Ahmed b Naseem Shah 9 26 1 0 34.62
Dinesh Chandimal c Imam-ul-Haq b Naseem Shah 34 60 4 0 56.67
Dhananjaya de Silva c Saud Shakeel b Abrar Ahmed 57 68 9 1 83.82
Sadeera Samarawickrama c Abdullah Shafique b Abrar Ahmed 0 4 0 0 0.00
Ramesh Mendis c Saud Shakeel b Abrar Ahmed 27 44 3 0 61.36
Prabath Jayasuriya run out (Shan Masood) 1 7 0 0 14.29
Asitha Fernando  b Abrar Ahmed 8 24 2 0 33.33
Dilshan Madushanka not out 0 5 0 0 0.00


Extras 3 (b 2 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 166/10 (48.4 Overs, RR: 3.41)
Fall of Wickets 1-9 (2.4) Nishan Madushka, 2-23 (6.1) Kusal Mendis, 3-35 (12.5) Angelo Mathews, 4-36 (14.1) Dimuth Karunaratne, 5-121 (33.5) Dinesh Chandimal, 6-122 (34.4) Sadeera Samarawickrama, 7-133 (36.3) Dhananjaya de Silva, 8-136 (38.6) Prabath Jayasuriya, 9-163 (46.2) Asitha Fernando , 10-166 (48.4) Ramesh Mendis,

Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 11 1 44 1 4.00
Naseem Shah 14 3 41 3 2.93
Abrar Ahmed 20.4 2 69 4 3.38
Nauman Ali 3 1 10 0 3.33
Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique c Dilshan Madushanka b Prabath Jayasuriya 201 326 19 4 61.66
Imam-ul-Haq c Nishan Madushka b Asitha Fernando  6 6 1 0 100.00
Shan Masood c Kusal Mendis b Asitha Fernando  51 47 4 1 108.51
Babar Azam lbw b Prabath Jayasuriya 39 75 4 1 52.00
Saud Shakeel lbw b Asitha Fernando  57 110 6 0 51.82
Sarfaraz Ahmed -select- b 14 22 3 0 63.64
Agha Salman not out 132 154 15 1 85.71
Mohammad Rizwan not out 50 67 4 1 74.63


Extras 26 (b 4 , lb 16 , nb 3, w 3, pen 0)
Total 576/5 (134 Overs, RR: 4.3)
Fall of Wickets 1-13 (2.3) Imam-ul-Haq, 2-121 (21.5) Shan Masood, 3-210 (47.5) Babar Azam, 4-319 (80.3) Saud Shakeel, 5-468 (113.2) Abdullah Shafique,

Bowling O M R W Econ
Asitha Fernando  25 1 133 3 5.32
Dilshan Madushanka 17 3 77 0 4.53
Ramesh Mendis 36 2 139 0 3.86
Prabath Jayasuriya 53 11 194 2 3.66
Dhananjaya de Silva 3 1 13 0 4.33


Batsmen R B 4s 6s SR
Nishan Madushka b Noman Ali 33 72 4 1 45.83
Dimuth Karunaratne c Imam-ul-Haq b Noman Ali 41 61 6 0 67.21
Kusal Mendis c Saud Shakeel b Noman Ali 14 35 2 0 40.00
Angelo Mathews not out 63 127 7 2 49.61
Dinesh Chandimal c Imam-ul-Haq b Noman Ali 1 11 0 0 9.09
Dhananjaya de Silva c Abrar Ahmed b Noman Ali 10 38 2 0 26.32
Sadeera Samarawickrama c Shan Masood b Noman Ali 5 11 1 0 45.45
Ramesh Mendis st Mohammad Rizwan b Noman Ali 16 42 2 0 38.10
Prabath Jayasuriya b Naseem Shah 0 4 0 0 0.00
Asitha Fernando  b 0 2 0 0 0.00
Dilshan Madushanka b 0 3 0 0 0.00


Extras 5 (b 0 , lb 4 , nb 0, w 1, pen 0)
Total 188/10 (67.4 Overs, RR: 2.78)
Fall of Wickets 1-69 (18.1) Nishan Madushka, 2-86 (26.2) Dimuth Karunaratne, 3-99 (30.2) Kusal Mendis, 4-109 (32.5) Dinesh Chandimal, 5-131 (46.2) Dhananjaya de Silva, 6-141 (50.1) Sadeera Samarawickrama, 7-177 (64.3) Ramesh Mendis, 8-184 (65.5) Prabath Jayasuriya, 9-188 (67.1) Asitha Fernando , 10-188 (67.4) Dilshan Madushanka,

Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 12 5 30 0 2.50
Naseem Shah 17.4 5 44 3 2.53
Abrar Ahmed 10 1 34 0 3.40
Noman Ali 23 8 70 7 3.04
Agha Salman 5 1 6 0 1.20



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<