இரண்டாவது டெஸ்டில் இருந்து நீங்கும் சர்பராஸ் அஹ்மட்

Pakistan tour of Sri Lanka 2023

203

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பதினொருவர் தரப்பில் இருந்து சர்பராஸ் அஹ்மட் நீக்கப்பட்டிருக்கின்றார். 

ஸ்டம்பினை தாக்கிய இந்திய அணித் தலைவிக்கு போட்டித் தடை

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைபாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது அசித பெர்னாண்டோ வீசிய பெளன்சர் பந்துவீச்சினை முகம் கொடுத்த போது, அது சர்பராஸ் அஹ்மட்டின் தலைக் கவசத்தில் தாக்கியிருந்தது 

எனினும் பந்து தாக்கிய பின்னர் உடனடியாக சர்பராஸ் அஹ்மட்டிற்கு அதன் பாதிப்புக்கள் வெளிப்படாது போயினும் அதன் தாக்கங்கள் தென்படத் தொடங்கிய போது, போட்டி சிறிது நேரம் தடைப்பட்டதோடு பாகிஸ்தான் பயிற்சிக் குழாத்தில் இருந்தும் அவரை பரிசோதித்தினர். தொடர்ந்து பரிசோதனை நிறைவில் பயிற்சிக்குழாத்தின் உறுப்பினர்கள் சர்பராஸ் அஹ்மட்டை மைதானத்தினை விட்டு வெளியேற்றினர். 

WATCH – தமது சுதந்திர கிண்ணங்களை வேறு நாடுகளுக்கு தாரை வார்த்த கிரிக்கெட் அணிகள்

இதன் பின்னர் புதிய துடுப்பாட்டவீரராக அகா சல்மான் களம் வந்திருந்தார். போட்டி தொடர்ந்த சந்தர்ப்பத்தில் தலை உபாதையினை (Concussion) சர்பராஸ் முகம் கொடுத்திருப்பது கண்டறியப்பட்டதோடு அவரின் பிரதியீடாக விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான மொஹமட் ரிஸ்வான் பாகிஸ்தான் பதினொருவர் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<