Home Tamil பயிற்சிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பிரகாசித்த பாபர் அசாம்

பயிற்சிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பிரகாசித்த பாபர் அசாம்

3991

இலங்கை கிரிக்கெட் பதினொருவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான பயிற்சிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், பாபர் அசாமின் அபார ஆட்டத்தோடு பாகிஸ்தான் அணி வலுப்பெற்றிருக்கின்றது.

கண்டி பெல்கோன்ஸ் அணியுடன் இணையும் சனத் ஜயசூரிய

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றில் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியுடன் விளையாடுகின்றது.

கொழும்பு கோல்ட்ஸ் அரங்கில் ஆரம்பமாகிய இந்தப் பயிற்சிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பவீரர்களாக வந்த அப்துல்லா சபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தினை வழங்கத் தவறினர். இதில் பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக மாறிய அப்துல்லா சபீக் ப்ரமோத் மதுசானின் பந்துவீச்சில் வெறும் 03 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இமாம்–உல்-ஹக் ஓட்டமேதுமின்றி ஓய்வறை நடந்தார்.

இதன் பின்னர் அஷார் அலி மற்றும் பாபர் அசாம் ஆகியோர் தமது தரப்பிற்கு பலமளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நல்ல நிலையொன்றுக்குச் சென்றது. பாகிஸ்தான் தரப்பில் பாபர் அசாம் அரைச்சதம் பூர்த்தி செய்து பின்னர் லக்ஷித ரசஞ்சனவின் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் மூன்றாம் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். பாபர் அசாம் ஆட்டமிழக்கும் போது 113 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பெல்கோன்ஸ் அணியுடன் இணையும் சனத் ஜயசூரிய

பாபர் அசாமின் பின்னர் அஷார் அலியின் விக்கெட்டும் அவர் 43 ஓட்டங்கள் பெற்ற நிலையில் லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் பறிபோனது. இதன் பின்னர் பாகிஸ்தான் அணியில் மத்திய வரிசை வீரர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாத போதும் அவ்வணிக்காக பின்வரிசையில் ஆடிய சவூத் சகீல் மற்றும் அகா சல்மான் ஆகியோர் கைகொடுத்தனர்.

இதனால் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 90 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

அதன்படி பாகிஸ்தான் அணியினை பலப்படுத்தி களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் அகா சல்மான் 43 ஓட்டங்களுடனும், சவூத் சகீல் 30 ஓட்டங்களுடனும் உள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியின் பந்துவீச்சு சார்பில் லக்ஷித ரசஞ்சன 3 விக்கெட்டுக்களையும், லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 277/7 (90) பாபர் அசாம் 88, அகா சல்மான் 43*, அஷார் அலி 43, லக்ஷித ரசஞ்சன 83/3, லசித் எம்புல்தெனிய 83/2

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<


Result

Match drawn

Sri Lanka Cricket XI
375/8 (99)

Pakistan
323/10 (97) & 178/2 (50)

Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique c Nuwanidu Fernando b Udith Madushan 3 10 0 0 30.00
Imam-ul-Haq c Nipun Dananjaya b Angelo Perera 0 10 0 0 0.00
Azhar Ali c Nuwanidu Fernando b Lasith Embuldeniya 43 118 3 0 36.44
Babar Azam c Lahiru Udara b Lakshitha Manasinghe 88 113 8 4 77.88
Fawad Alam c Sadeera Samarawickrama b Lakshitha Manasinghe 22 64 2 0 34.38
Mohammad Rizwan b Lakshitha Manasinghe 31 65 3 0 47.69
Shan Masood c Minod Bhanuka b Lasith Embuldeniya 6 18 1 0 33.33
Saud Shakeel retired 30 74 3 0 40.54
Agha Salman c Nuwanidu Fernando b Udith Madushan 55 79 3 1 69.62
Mohammad Nawaz c Lasith Embuldeniya b Dilshan Madushanka 16 19 3 0 84.21
Yasir Shah not out 9 16 1 0 56.25
Shaheen Shah Afridi not out 5 15 0 0 33.33


Extras 15 (b 3 , lb 5 , nb 3, w 4, pen 0)
Total 323/10 (97 Overs, RR: 3.33)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 17 4 54 2 3.18
Pramod Madushan 12 2 29 1 2.42
Lasith Embuldeniya 30 8 83 2 2.77
Chamika Karunaratne 5 0 15 0 3.00
Lakshitha Manasinghe 23 2 83 3 3.61
Nipun Dananjaya 5 0 12 0 2.40
Ashen Bandara 2 0 13 0 6.50
Udith Madushan 3 0 17 1 5.67
Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Sarfaraz Ahmed b Shaheen Shah Afridi 57 94 9 0 60.64
Sadeera Samarawickrama c Yasir Shah b Agha Salman 91 99 13 0 91.92
Nuwanidu Fernando lbw b Yasir Shah 78 177 4 1 44.07
Nipun Dananjaya c Abdullah Shafique b Mohammad Nawaz 14 19 2 0 73.68
Lahiru Udara c Sarfaraz Ahmed b Mohammad Nawaz 4 5 1 0 80.00
Sahan Arachchige b Naseem Shah 28 67 2 0 41.79
Chamika Karunaratne lbw b Hasan Ali 27 43 5 0 62.79
Minod Bhanuka not out 32 45 7 0 71.11
Ashen Bandara lbw b Faheem Ashraf 12 23 2 0 52.17
Lakshitha Manasinghe not out 18 26 3 0 69.23


Extras 14 (b 0 , lb 9 , nb 2, w 3, pen 0)
Total 375/8 (99 Overs, RR: 3.79)
Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 12 4 34 1 2.83
Hasan Ali 12 0 35 1 2.92
Nauman Ali 16 2 60 0 3.75
Agha Salman 13 0 76 1 5.85
Naseem Shah 10 2 34 1 3.40
Yasir Shah 20 1 86 1 4.30
Mohammad Nawaz 10 2 24 2 2.40
Faheem Ashraf 4 0 10 1 2.50
Haris Rauf 2 1 7 0 3.50


Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique -select- b 63 111 5 2 56.76
Imam-ul-Haq c Minod Bhanuka b Lakshitha Manasinghe 30 45 5 0 66.67
Fawad Alam c Nuwanidu Fernando b Lasith Embuldeniya 6 19 1 0 31.58
Azhar Ali -select- b 40 75 3 0 53.33
Sarfaraz Ahmed not out 21 34 1 0 61.76
Mohammad Nawaz not out 13 16 1 0 81.25


Extras 5 (b 4 , lb 0 , nb 0, w 1, pen 0)
Total 178/2 (50 Overs, RR: 3.56)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 5 2 11 0 2.20
Pramod Madushan 4 0 17 0 4.25
Udith Madushan 3 0 7 0 2.33
Lasith Embuldeniya 20 1 72 1 3.60
Lakshitha Manasinghe 13 0 50 1 3.85
Ashen Bandara 4 0 12 0 3.00
Sahan Arachchige 1 0 5 0 5.00