பாகிஸ்தான் தொடரிலிருந்து பெதும் நிஸ்ஸங்க நீக்கம்!

Pakistan tour of Sri Lanka 2022

164

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடருக்கான குழாத்திலிருந்து இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க நீக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த தொடருக்கான குழாத்தில் பெதும் நிஸ்ஸங்க இணைக்கப்பட்டிருந்த போதும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருந்தது.

இதன்காரணமாக அவர் அணியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவருக்கு பதிலாக ஓசத பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டிருந்தார். ஓசத பெர்னாண்டோ பாகிஸ்தான் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிவருவதுடன், பெதும் நிஸ்ஸங்கவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

பெதும் நிஸ்ஸங்க தற்போது கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், அவரின் உடல்நிலை சீறாகுவதற்குமான காலம் தேவைப்படுவதால் பெதும் நிஸ்ஸங்க அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<