இரண்டு தடவைகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி

178

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2022-2023 வரையிலான காலப்பகுதியில் இரண்டு தடவைகள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கின்றது.

>>LPL 2021 தொடரின் இறுதிப்போட்டிக்கு கோல் கிளேடியேட்டர்ஸ்

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக எதிர்கால கிரிக்கெட் சுற்றுத்தொடர் (FTP) அட்டவணைக்கு அமைவாக 2022ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நடைபெறவிருப்பதோடு, இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் அடங்குகின்றன.

இதேநேரம் இந்த ஆண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்தானதனை ஈடு செய்யும் விதத்தில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தானுக்கு மீண்டும் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதோடு, அந்த சுற்றுப்பயணத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரிலும் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் முதலாவது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் அடங்குகின்ற இரண்டு  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. இன் டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் உள்ளடங்குவதோடு, அதில் காணப்படும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் உலகக் கிண்ண சுபர் லீக்கில் உள்ளடங்குகின்றது.

>>இந்திய டெஸ்ட் அணியின் உப தலைவராகும் கேஎல் ராகுல்

இதேநேரம் இந்த கிரிக்கெட் தொடர்களுக்கான திகதிகளை தீர்மானிக்கும் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் – நியூசிலாந்து கிரிக்கெட் சபைகள் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2022ஆம் ஆண்டின் மார்ச் மாதம் தொடக்கம் 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு எதிராக 8 டெஸ்ட் போட்டிகளிலும், 11 ஒருநாள் போட்டிகளிலும், 13 T20I போட்டிகளிலும் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<