பாகிஸ்தானுக்கு உலகக் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்பு: இன்சமாம்

168
GETTY IMAGES

இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை வெல்வதற்கு எதிர்பார்க்கப்படும் முக்கிய அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருக்கும் என, அவ்வணியின் சிரேஷ்ட தேர்வாளரான இன்சமாம் உல் ஹக் தெரிவித்திருக்கின்றார்.

உலகக் கிண்ணத்திற்காக பாகிஸ்தான் தொடரில் ஆர்ச்சரை ஒத்திகை பார்க்கவுள்ள இங்கிலாந்து

மேற்கிந்திய தீவுகளை பிறப்பிடமாக கொண்ட, இளம் பந்துவீச்சாளரான ஜொப்ரா….

பாகிஸ்தான் அணி, மே மாதம் 31ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுடன் இடம்பெறும் போட்டியுடன் உலகக் கிண்ணத்தினை ஆரம்பம் செய்கின்றது. அதோடு,  உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரு போட்டி கொண்ட T20 தொடர் ஆகியவற்றிலும் பாகிஸ்தான் பங்கேற்கின்றது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்று முடிந்திருக்கும் ஒருநாள் தொடரினை 5-0 என பறிகொடுத்திருக்கின்றது.  குறித்த தொடரில் பாகிஸ்தான் தமது முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கிய நிலையில் இளம் வீரர்களான சான் மசூத், ஆபித் அலி, சாத் அலி, மொஹமட் அப்பாஸ் மற்றும் மொஹமட் ஹஸ்னைன் போன்றோர் போட்டித்தன்மை கொண்ட கிரிக்கெட் விளையாடி நம்பிக்கை  தந்திருந்தனர்.

அவுஸ்திரேலிய தொடரில் பாகிஸ்தான் அணியின் வைட்வொஷ் தொடர் தோல்வி ஒரு பக்கம் இருந்த போதிலும், அவுஸ்திரேலிய அணியுடனான கடைசி இரண்டு போட்டிகளிலும் இளம் வீரர்கள் போட்டித்தன்மை கொண்ட கிரிக்கெட் விளையாடியது நல்ல விடயம் என இன்சமாம் உல் ஹக் குறிப்பிட்டிருந்தார்.

“ அவுஸ்திரேலியாவுக்கு எதிராக, நாம் எமது முக்கிய வீரர்கள் ஏழு பேருக்கு ஓய்வினை வழங்கியிருந்தோம். குறித்த தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் எமது முக்கிய பத்து வீரர்கள் விளையாடியிருக்கவில்லை. நிலைமைகள் இவ்வாறு இருந்த போதிலும் எமது அணி குறித்த போட்டிகளில் போராடியிருந்தது. இதனை நாங்கள் ஒரு சிறந்த வெளிப்பாடாகவே பார்க்கின்றோம். “

இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி முகாமையாளராக பர்வீஸ் மஹ்ரூம் நியமனம்

2020 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட ICC உலகக் கிண்ண போட்டியை ….

அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் ஆபித் அலி தனது கன்னி சதத்தினை பூர்த்தி செய்ய, ஹரிஸ் சொஹைல் 129 பந்துகளுக்கு 130 ஓட்டங்களை பெற்றிருந்ததார். அதோடு, குறித்த போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான உஸ்மான் சின்வாரி 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசிய இன்சமாம் உல் ஹக் “ நான் உலகக் கிண்ணத்திற்கான ஒரு சிறந்த அணியினை தெரிவு செய்வதில் மிகவும் உறுதியுடன் இருக்கின்றேன். இதேநேரம், பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தினை வெல்வதற்கு எதிர்பார்க்கப்படும் முக்கிய அணிகளில் ஒன்றாகவும் இருக்கின்றது. “

“ உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக இங்கிலாந்தில் எமக்கு  வேலைப்பழுமிக்க தொடர் ஒன்று இருப்பதனால், எமது (முக்கிய) வீரர்களுக்கு ஓய்வு வழங்கியிருந்தோம். அதோடு, எமது வீரர்கள் குழாத்தின் பலம்  என்ன என்பதையும் நாம் பரீட்சித்து பார்க்க வேண்டியிருந்தது. இதன் காரணமாகவுமே குறித்த ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. “ எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையிலான தொடர், மே மாதம் 5ஆம் திகதி கார்டிப் நகரில் ஆரம்பமாகும் போட்டியுடன் ஆரம்பமாகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<