மீண்டும் பாகிஸ்தான் ஒரு நாள் அணியில் றிஸ்வான்

391
ESPN

தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் 16 பேர் கொண்ட குழாம் நேற்று முன்தினம் (09) பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் இன்ஸமாம் உல் ஹக்கினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு தென்னாபிரிக்க அணியுடன் மூன்று டெஸ்ட், ஐந்து ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது.  

பாகிஸ்தானை வேகத்தால் மிரட்டி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா

rசுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது …

இச்சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தென்னாபிரிக்கா அணி 2-0 எனும் அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

எனவே, டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் அணி அடுத்து நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற ஆவலுடன் அத்தொடரை எதிர்பார்த்துள்ளது.

அந்த அடிப்படையில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான 16 பேர் கொண்ட குழாத்தினை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்தது. இதில், நம்பிக்கைக்குறிய வேகப்பந்து வீச்சாளரான முஹமட் ஆமிர், விக்கெட் காப்பாளர் முஹமட் றிஸ்வான் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் தொடரில் விளையாடிய அஷாட் சபீக், அஸார் அலி, ஹாரிஸ் சுஹைல், முஹமட் அப்பாஸ் மற்றும் யாசிர் ஷா ஆகியோருக்குப் பதிலாக ஒரு நாள் குழாமில் முஹமட் ஹபீஸ், சுஹைப் மலிக், உஸ்மான் ஷென்வாரி மற்றும் இமாட் வஸீம் ஆகியோர் புதிகாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வெள்ளையடிப்புக்கு உள்ளான இலங்கை தொடர்ந்தும் எட்டாமிடத்தில்

இலங்கைக்கு எதிராக 3-0 எனும் அடிப்படையில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய …

மேலும், நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடிய வீரர்களான ஆசிப் அலி, ஜுனைட் கான் மற்றும் முழங்கால் உபாதைக்குள்ளாகிய ஹரிஸ் சுஹைல் ஆகியோர் தென்னாபிரிக்காவுடனான ஒரு நாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் அரங்கில் அறிமுக வீரர்களாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களான ஷான் மஸ்ஸூத் மற்றும் ஹுஸைன் தலட் ஆகியோர் தென்னாபிரிக்காவுடனான தொடரில் கன்னி போட்டியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளனர்.

சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக பகர் சமான், இமாம் உல் ஹக், ஷான் மஸ்ஸூத் ஆகியோரும், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களாக பாபர் அஸாம், சுஹைப் மலிக், முஹமட் ஹபீஸ், ஹுஸைன் தலட் ஆகியோரும், சகலதுறை வீரர்களாக இமாட் வஸீம், பஹீம் அஷ்ரப் ஆகியோரும் துடுப்பாட்ட துறைக்கு பங்களிப்பு செய்யவுள்ளனர்.

சொந்த மண்ணில் ஆஸி. அணியை எதிர்கொள்ளவுள்ள இந்தியா

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டு …

அதேபோன்று, சுழற்பந்து வீச்சாளராக சதாப் கானும், வேகப்பந்து வீச்சாளராக முஹமட் ஆமிர், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, உஸ்மான் ஷென்வாரி ஆகியோரும் செயற்படவுள்ளதுடன், மேலுமொரு விக்கெட் காப்பாளராக இரண்டு வருடங்களுக்கு பின்னர் முஹமட் றிஸ்வானும் குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது அணியை பலப்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது இலங்கை நேரப்படி மாலை 02.30 மணிக்கு ஆரம்பமாகும்.

போட்டி அட்டவணை

  • ஜனவரி 19 – முதலாவது ஒரு நாள் போட்டிபோர்ட் எலிசபெத் (பகலிரவு)
  • ஜனவரி 22 – இரண்டாவது ஒருநாள் போட்டி டேர்பன் (பகலிரவு)
  • ஜனவரி 25 – மூன்றாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியன் (பகலிரவு)
  • ஜனவரி 27 நான்காவது ஒருநாள் போட்டி ஜொஹனர்ஸ்பேர்க் (பகல்)
  • ஜனவரி 30 ஐந்தாவது ஒருநாள் போட்டிகேப்டவுண் (பகலிரவு)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<