பாகிஸ்தானை வேகத்தால் மிரட்டி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா

157
Photo - AFP

rசுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 3ஆம் திகதி ஆரம்பமானது. ஏற்கனவே முதலாவது போட்டியில் வெற்றி பெற்றிருந்த தென்னாபிரிக்க அணி இப்போட்டியிலும் 9 விக்கெட்டுகளால்  வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி எஞ்சியிருக்க 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தியது தென்னாபிரிக்கா

பாகிஸ்தான் கிரிகெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள்…

இப்போட்டியின்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு பிளசிஸ் முதலில் பந்துவீச தீர்மானித்திருந்தார். அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியினர் மீண்டும் ஒருமுறை தென்னாபிரிக்க வேகப் பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் சர்பராஸ் அஹமட் அதிகபட்சமாக 56 ஓட்டங்கள் மற்றும் ஷான் மசூத் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டதை தவிர ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக கடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற டுவான் ஒலீவியர் 4 விக்கெட்டுகளையும் றபாடா மற்றும் ஸ்டெய்ன் ஆகியோர் முறையே 3,2 விக்கெட்டுகள் என கைப்பற்றியிருந்தனர்.

மெக்ராத்தை ஆச்சரியப்பட வைத்த விராட் கோஹ்லி

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இளஞ்சிவப்பு டெஸ்ட் போட்டியின்…

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணிக்காக, கடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் ஓட்டம் பெறாத அணித்தலைவர் டு பிளசிஸ் இப்போட்டியில் 103 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன் ஏனைய வீரர்களான மர்க்ரம், பவுமா மற்றும் டி கொக் ஆகியோரின் அரைச்சதங்கள் பெற்றனர்.

இவர்களின் உதவியோடு பாகிஸ்தான் அணியை விட 254 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தவேளை தென்னாபிரிக்க அணி 431 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இப்போட்டியின் போது டி கொக் டெஸ்ட் போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் மொஹமட் ஆமிர் மற்றும் ஷஹீன் அஃப்ரிடி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

திசர பெரேராவை பாராட்டும் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள்

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில்…

இதனை அடுத்து  254 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய பாகிஸ்தான் அணி 27 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த போதும் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த ஷான் மசூத் மற்றும் அசாத் ஷபீக் ஜோடி 132 ஓட்டங்கள் பெற்று அணியை வலுப்படுத்தியிருந்தனர். எனினும் மூன்றாவது விக்கெட்டாக ஷான் மசூத் 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததை தொடர்ந்து அசாத் ஷபீக் 88 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் அவ்வணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட போது சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் அணியை இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து மீட்டெடுத்தார் என்றால் மிகையாகாது. பாபர் அசாம் 72 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இறுதியில் பாகிஸ்தான் அணி 40 ஓட்டங்கள் முன்னிலையுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்கள் பெற்றிருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. பந்து வீச்சில் றபாடா மற்றும் ஸ்டெய்ன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், 41 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றியிலக்கை பெறுவதற்காக இன்றைய (6) நான்காம் நாள் ஆட்டத்தில் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆபிரிக்க அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

இலங்கை A அணிக்காக கலக்கிய மொஹமட் சிராஸ்

போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு பிளசிஸ் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளும்  மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் எதிர்வரும் 11ஆம் திகதி சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் அணி (முதல் இன்னிங்ஸ்) – 177 – சர்பராஸ் அஹமட் 56, ஷான் மசூத் 44, ஒலீவியர் 48/4, ஸ்டெய்ன் 48/3,

தென்னாபிரிக்க அணி (முதல் இன்னிங்ஸ்) – 431 – டு பிளசிஸ் 103, மர்க்ரம் 78, பவுமா 75, ஆமிர் 88/4 ஷஹீன் அஃப்ரிடி 123/4

பாகிஸ்தான் அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 294  அசாத் ஷபீக் 88, பாபர் அசாம் 72, ஷான் மசூத் 61, றபாடா 61/4, ஸ்டெய்ன் 85/4

தென்னாபிரிக்க அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 43/1 – ( Target – 41 ) எல்கர் 24*, மொஹமட் அப்பாஸ் 14/1

முடிவு தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<