ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகவுள்ள வெளிநாட்டு வீரர்கள்

254

கிரிக்கெட் உலகின் வல்லரசை தீர்மானிக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் மே மாத இறுதியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் அணிகளின் கனவான உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள அணிகள் தத்தமது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணியை அறிவித்து வருகின்றன.

இதுஇவ்வாறிருக்க, தொடர்ந்து ஐந்தாவது வாரமாகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற ஐ.பி.எல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்ற ஒருசில முக்கிய வெளிநாட்டு வீரர்கள் உலகக் கிண்ண பயிற்சி முகாம்களில் கலந்துகொள்ளும் நோக்கில் .பி.எல் தொடர் நிறைவடைவதற்கு முன்னர் மீண்டும் தமது நாட்டுக்கு திரும்பவுள்ளனர்.

அவுஸ்திரேலிய வீரர்கள்

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரின் தடைக்காலம் கடந்த மார்ச் மாதம் நிறைவுக்கு வந்தது. இதையடுத்து, தற்போது நடைபெற்று வருகின்ற .பி.எல் தொடரில் விளையாடிவரும் குறித்த இரு வீரர்களும், கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றனர்.

உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் ஸ்மித், வோனர்

அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்…

இதுஇவ்வாறிருக்க, உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பிரிஸ்பேனில் நடைபெறும் பயிற்சி முகாமில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.  எனவே, .பி.எல் தொடரின் கடைசி கட்டப் போட்டிகளில் டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் ஜேசன் பெஹென்ட்ரோப் ஆகிய அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சி முகாமில், மூன்று பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அவுஸ்திரேலிய பதினொருவர் மற்றும் நியூசிலாந்து பதினொருவர் அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று பயிற்சி போட்டிகளும் அலென் போர்டர் மைதானத்தில் நடைபெறுகிறது.  

.பி.எல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் டேவிட் வோர்னர் தற்போது வரை .பி.எல் தொடரில் (ஒரு சதம், 5 அரைச்சதம் உள்ளடங்கலாக 450 ஓட்டங்கள்) அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஸ்மித்தும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு அரைச்சதத்துடன் 186 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதேநேரம், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற ஜேசன் பெஹென்ரோப் மே முதலாம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளார். இம்முறை .பி.எல் தொடரில் முதல்முறையாக மும்பை அணிக்காக விளையாடிய அவர், இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.  

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்…

அத்துடன், பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரிற்குப் பிறகு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் மார்கஸ் ஸ்டொய்னிஸ், இதுவரை 5 போட்டிகளில் விளையாடி எந்தவொரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. எனினும், துடுப்பாட்டத்தில் 102 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.  

எனவே, பிளே ஓப் சுற்றுகளுக்கு மார்கஸ் ஸ்டொய்னிஸ் விளையாடும் பெங்களூர் அணியைத் தவிர, ஏனைய மூன்று வீரர்களும் இடம்பெற்றுள்ள அணிகள் தகுதி பெறும் பட்சத்தில் அவர்களுக்கு அதில் பங்கேற்க முடியாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து வீரர்கள்

உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இங்கிலாந்து அணி நேற்று (17) அறிவித்தது. அந்த அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரரான ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடம் அளிக்கப்படவில்லை.

எனினும், உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக அயர்லாந்து அணியுடன் ஒரு டி-20 போட்டியிலும், பாகிஸ்தான் அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. அந்த இரண்டு தொடரிலும் ஜோப்ரா ஆர்ச்சரை இணைத்துக்கொள்ள அந்நாட்டு தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகக் கிண்ணத்திற்கான உத்தேச இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) கிரிக்கெட்…

எனவே, இம்முறை .பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஜோப்ரா, இம்மாத இறுதிக்குள் இங்கிலாந்து நோக்கிப் பயணமாகவுள்ளார். இது ராஜஸ்தான் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.பி.எல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ராஜஸ்தான் அணி விளையாடிய 8 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.

கிட்டத்தட்ட பிளே ஓப் வாய்ப்பை அந்த அணி இழந்த போதிலும், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்டதால் இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் வெளியில் அமர்த்தப்பட்டார். இதனால் மும்பை மற்றும் கிங்ஸ் லெவன் பன்ஞாப் அணிகளுடனான போட்டியில் அவர் விளையாடவில்லை. எனவே அவர் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

அதேபோல, இங்கிலாந்து அணியின் மற்றுமொரு வீரரான ஜோஸ் பட்லர் இம்முறை .பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகின்றார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3 அரைச்சதங்களுடன் 311 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

எனவே, உலகக் கிண்ணத்துக்கான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணியிலும், பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரிலும் இவ்விரண்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளதால் .பி.எல் தொடரின் கடைசி சில போட்டிகளில் விளையாட முடியாமல் நாடு திரும்பவுள்ளனர்.

இவ்வாறு, ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நாடு திரும்புவதால் கடைசி கட்டத்தில் ராஜஸ்தான் அணி மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இம்முறை உலகக் கிண்ண இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ஜோனி பேர்ஸ்டோவ் மற்றும் மொயின் அலி ஆகிய இரண்டு வீரர்களும் இம்மாத இறுதியில் மீண்டும் இங்கிலாந்து நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

இம்முறை .பி.எல் தொடரில் முதற்தடவையாக சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகின்ற ஜோனி பேர்ஸ்டோவ், இதுவரை 8 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைச்சதம் உள்ளடங்கலாக 365 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார்.

அதேபோல, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகின்ற மொயின் அலி, 8 போட்டிகளில் விளையாடி 124 ஓட்டங்களையும், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

பங்களாதேஷ் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு: சகீபுக்கு அவசர அழைப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண…

எனவே, இம்முறை .பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் மீண்டும் நாடு திரும்பவுள்ளனர். இதனால் பிளே ஓப் சுற்றில் விளையாடக் காத்திருக்கும் அணிகளுக்கு மிகப் பெரிய இழப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பங்களாதேஷ் வீரர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் சகீப் அல் ஹசன் உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சிக்காக நாடு திரும்பவுள்ளார்.  

நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சகீப் அல் ஹசன் அணியில் இருந்து விலகினார். நாடு திரும்பிய அவர் குணமடைந்த பிறகு .பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இணைந்து கொண்டார்.

ஹைதராபாத் அணிக்காக இரண்டு போட்டிகளில் மாத்திரமே அவர் விளையாடினாலும், அந்த 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்படாததால், வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்குப் பதிலாக மொஹமட் நபி விளையாடி வந்தார்.

இந்த நிலையில், சகீப் அல் ஹசன் தற்போது உலகக் கிண்ணத்துக்குச் செல்லும் 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 5ஆம் திகதி அயர்லாந்தில் ஆரம்கபமாகவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரிற்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார். எனவே, பயிற்சிக்காக அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<