கிரிக்கட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 16

1824
OTD Sep 16

1966ஆம் ஆண்டு அசன்க குருஸிங்ஹ பிறப்பு

இலங்கையின் கிரிக்கட் வரலாற்றில் பொன்னான தருணங்களில் ஒன்றான 1996ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வெல்லுவதற்கு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 65 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய இடதுகை துடுப்பாட்ட வீரர் அசன்க குருஸிங்ஹவின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் : அசன்க பிரதீப் குர்ஸிங்ஹ

பிறப்பு : 1966ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி

பிறந்த இடம் : கொழும்பு

வயது : 50

விளையாடிய காலப்பகுதி : 1985ஆம் ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி

துடுப்பாட்ட பாணி : இடதுகை  துடுப்பாட்டம்

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 147

மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 3902

அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 117*

ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 28.27

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 41

மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 2452

அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 143

டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 38.92

பந்துவீச்சில் வலதுகை மித வேகப்பந்து வீச்சாளரான அசன்க குருஸிங்ஹ ஒருநாள் போட்டிகளில் 55 இனிங்ஸ்களில் பந்துவீசி 52.07 என்ற பந்துவீச்சு சராசரியில் 26 விக்கட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 39 இனிங்ஸ்களில் பந்துவீசி 34.05 என்ற பந்துவீச்சு சராசரியில் 20 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.


1996ஆம் ஆண்டுகெனடாவில் 1ஆவது ஒருநாள் போட்டி

உலக கிரிக்கட் வரலாற்றில் கெனடாவில் முதல் தடவையாக கிரிக்கட் போட்டி ஒன்று நடைபெற்ற நாளாகும். இந்தப் போட்டி டொரொண்டோ கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி ஆரம்பிக்க முன்னரே மழை பொழிந்தமையால் போட்டி 33 ஓவர்களைக் கொண்ட போட்டியாக மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானம் செய்தது.

அதற்கிணங்க அழைப்பை ஏற்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 33 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் இஜாஸ் அஹமத் 35 ஓட்டங்களையும், சயீத் அன்வர் 46 ஓட்டங்களையும், சக்ளயின் முஸ்தாக் ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களையும், அமீர் சுஹைல் 12 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணியின் பந்து வீச்சில் அணில் கும்ப்ளே மற்றும் ஜவகள் ஸ்ரீநாத் ஆகியோர் தலா 3 விக்கட்டுகள் வீதம் கைப்பற்ற வெங்கடேஷ் பிரசாத் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.

பின்னர் 171 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 29.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று 19 பந்துகள் மீதமிருக்க 8 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் இழக்காமல் 89 ஓட்டங்களையும், ராஹுல் டிராவிட் 39 ஓட்டங்களையும், முஹமத் அசாருதீன் ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

கிரிக்கட் வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 14

செப்டம்பர் மாதம் 16ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1863ஆம் ஆண்டு – ஜான் ட்ரம்பல் (அவுஸ்திரேலியா)
  • 1877ஆம் ஆண்டு – ரொபேர்ட் கிரஹாம் (தென் ஆபிரிக்கா)
  • 1932ஆம் ஆண்டு – மிக்கி ஸ்டீவர்ட் (இங்கிலாந்து)
  • 1954ஆம் ஆண்டு – ரோஜர் வூல்லி (அவுஸ்திரேலியா)
  • 1956ஆம் ஆண்டு – கொர்நேலியு ஹென்றி (கனடா)
  • 1966ஆம் ஆண்டு – முர்ரே பிரவுன் (தென் ஆபிரிக்கா)
  • 1967ஆம் ஆண்டு – பேரிங்க்டன் பிரவுன் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1974ஆம் ஆண்டு – கவின் ஹாமில்டன் (ஸ்கொட்லாந்து)
  • 1979ஆம் ஆண்டு – பிராட்லி ஸ்காட் (நியூசிலாந்து)
  • 1989ஆம் ஆண்டு – அமன்ப்ரிட் சிங் (இந்தியா)
  • 1989ஆம் ஆண்டு – நிக் பெர்ட் (நியூசிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்