அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராகிறார் டொனல்ட்

795
Allan Donald
@Getty Images

எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் அத்தொடருக்கான அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சு பயிற்சிவிப்பாளராக இவ்வருடம் தனது 50வது வயதை எட்டும் தென்ஆபிரிக்கா அணியின் வேகப் பந்து வீச்சாளர் எலன் டொனல்ட் நியமிக்கப்படவுள்ளார் என அவுஸ்திரேலியாவில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் அறிவித்துள்ளன.

தென்ஆபிரிக்கா அணிக்காக 1992-2003 வரையான காலப்பகுதியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக பங்குபற்றியுள்ள எலன் டொனல்ட் 72 டெஸ்ட் போட்டிகளில் 330 விக்கட்டுகளையும், 164 ஒருநாள்  போட்டிகளில் 272 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

‘வெள்ளை மின்னல்’ (White Lightning) என்ற புனைப் பெயருடைய டொனல்ட் 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை தென்ஆபிரிக்க அணியின் பந்துவீச்சு பயிற்சிவிப்பாளராக செயற்பட்டு டெல் ஸ்டெயின், வேர்ணன் பிலண்டர் மற்றும் மோர்ன் மோர்கல் ஆகிய சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கி இருந்தமை ஒரு முக்கிய அம்சமாகும்.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்