டில்ஷான்‌‌ ‌‌முனவீரவின்‌‌ ‌‌போராட்டம்‌‌ ‌‌வீண்‌:‌ ‌‌குருநாகல்‌‌ ‌‌இளையோருக்கு‌ ‌ த்ரில்‌‌ ‌‌வெற்றி‌

SLC Major Club T20 Tournament 2020/21

133

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் பிரதான கழகங்களுக்கு இடையிலான இடையிலான மேஜர் T20 லீக் தொடரின் காலிறுதிப் போட்டிகள் இன்று (16) நிறைவுக்கு வந்தன. 

இதில் கொழும்பு கிரிக்கெட் கழகம், SSC கழகம், இராணுவ கிரிக்கெட் கழகம் மற்றும் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகங்கள் ஆகியன காலிறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டி அரை இறுதியில் விளையாடுவதற்கு தகுதிபெற்றன

மேஜர் T20 லீக்கில் சதத்தை தவறவிட்ட சதீர் சமரவிக்ரம

இதில் சிறப்பம்சம் என்னவெனில், இலங்கை அணிக்காக விளையாடி வருகின்ற அனுபவ வீரர்களைக் கொண்ட NCC மற்றும் நீர்கொழும்பு ஆகிய கிரிக்கெட் கழகங்கள் இளம் வீரர்களைக் கொண்ட குருநாகல் இளையோர் மற்றும் இராணுவ கழகங்களிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

ராகம கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சினை வெளிக்காட்டியிருந்த கொழும்பு கிரிக்கெட் கழகம் 57 ஓட்டங்களால் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் கொழும்பு கழகத்துக்காக லசித் அபேரட்ன அரைச்சதம் கடந்து 54 ஓட்டங்களையும், மலிந்த புஷ்பகுமார 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்

மேஜர் T20 லீக்கில் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய ஜீவன் மெண்டிஸ்

எனவே லீக் போட்டியில் தோல்வியுறாத அணியாக வலம்வந்த நடப்புச் சம்பியனான கொழும்பு கிரிக்கெட் கழகம் இம்முறை மேஜர் T20 லீக்கின் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 150/5 (20) – லசித் அபேரட்ன 54, ஷான் ப்ரியன்ஜன் 41, அமில அபோன்சோ 2/16, பினுர பெர்னாண்டோ 2./29

ராகம கிரிக்கெட் கழகம் – 93/10 (17) – ஜனித் லியககே 29, நிஷான் மதுஷங்க 24, மலிந்த புஷ்பகுமார 4/20, நுவன் துஷா 2/15, ஷான் ப்ரியன்ஜன் 2/16

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 57 ஓட்டங்களால் வெற்றி 

இராணுவ கிரிக்கெட் கழகம்  எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

அனுபவ வீரர்களான டில்ஷான் முனவீர (59) மற்றும் மாதவ வர்ணபுர (55) ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்தும், இராணுவ கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக சிசிசி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் 6 ஓட்டங்களால் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது

Video – ஒருநாள் தொடரில் கலக்கிய இலங்கையின் மும்மூர்த்திகள்..!|Sports RoundUp – Epi 153

இந்தப் போட்டியில் இராணுவ கிரிக்கெட் கழகத்துக்காக பந்துவீச்சில் மிரட்டிய 22 வயதுடைய வலதுகை வேகப் பந்துவீச்சாளரான ஹேஷான் ஹெட்டியாரச்சி 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் வீழ்த்தி அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்

அத்துடன், இம்முறை மேஜர் லீக் T20 தொடரில் ஐந்து விக்கெட் குவியலைப் பதிவுசெய்த நான்காவது வீரராகவும் இடம்பிடித்தார்.  

போட்டியின் சுருக்கம்

இராணுவ கிரிக்கெட் கழகம் – 164/5 (20) – துலின டில்ஷான் 39, ஹிமாஷ லியனகே 33*, சீக்குகே பிரசன்ன 24, டில்ஷான் முனவீர 2/20, ரொஸ்கோ டட்டில் 2/34

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 158/9 (20) – டில்ஷான் முனவீர 59, மாதவ வர்ணபுர 55, ஹேஷான் ஹெட்டியாரச்சி 5/38, சீக்குகே பிரசன்ன 2/23

முடிவு இராணுவ கிரிக்கெட் கழகம் 6 ஓட்டங்களால் வெற்றி 

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்  எதிர் SSC கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக சிசிசி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில் ப்ரபாத் ஜயசூரியவின் அபார பந்துவீச்சின் மூலமாக SSC கழகம் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தெரிவாகியது

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 117 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலெடுத்தாடிய SSC  கழகம் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 118 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பொலிஸ் கழகத்துக்காக பந்துவீச்சில் மிரட்டிய கபில்ராஜ்

SSC கழகத்தின் பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 4 ஓவர்களில் 16 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், கலன பேரேரா 4 பந்துகளில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 117/10 (19.4) – சங்கீத் குரே 26, கவிஷ் அன்ஜுல 25, ஜெஹான் டேனியல் 21, ப்ரபாத் ஜயசூரிய 4/16, கலன பெரேரா 2/01

SSC கழகம் – 118/4 (17.2) – 118/4 (17.2) – நுவனிந்து பெர்னாண்டோ 41, சங்கீத் குரே 2/18

முடிவு – SSC கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி 

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்  எதிர் NCC கழகம்

இம்முறை போட்டித் தொடரில் பல முன்னணி கழகங்களுக்கு அதிர்ச்சியளித்து காலிறுதி வரை முன்னேறிய குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம், இதே தொடரின் லீக் போட்டிகளில் தோல்வியுறாத அணியாக வலம்வந்த NCC கழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது

இதன்படி, குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்தின் அபார பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல், 92 ஓட்டங்களுக்கு சுருண்ட NCC கழகம், 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இலங்கையின் இளம் பந்துவீச்சாளர்களை குறிவைக்கும் CSK

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் கயான் மனீஷானின் அரைச் சதத்தின் உதவியுடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது

பந்துவீச்சில் NCC கழகத்துக்காகக் களமிறங்கிய லஹிரு குமார 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

போட்டியின் சுருக்கம் 

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் -155/5 (20) – கயான் மனீஷான் 56, சமீர சந்தமால் 48, லஹிரு குமார 4/17

NCC கழகம் – 92/10 (14.4) – அஞ்சலோ பெரேரா 27, ஹசித போயகொட 21, நவீன் குணவர்தன 3./14, ரன்தீர ரணசிங்க 2/07, ருவின் பீரிஸ் 2/20

முடிவு குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் 63 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<