வரலாற்றில் இன்று : மே மாதம் 05

238
On this day - 05th May

2010ஆம் ஆண்டு – டென்ரா டொட்டின் சதம்

மேற்கிந்திய மகளிர் கிரிக்கட்டில் வரலாற்று சிறப்புமிக்க நாள். மேற்கிந்திய மகளிர் அணியின் டென்ரா டொட்டின் ஐ.சி.சி உலகக் கிண்ணத்தின் போது தென்ஆபிரிக்க அணிக்கு எதிராக 38 பந்துகளில் முதல் சதத்தைப் பெற்றார்.

அப்போட்டியில் அவர் இறுதியாக ஆட்டம் இழக்காமல் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கலாக 112 ஓட்டங்களைப் பெற்று இருந்தார்.

2003ஆம் ஆண்டு – லொவ்சனின் ஹெட்ரிக்

பார்பிடோஸ் மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜெர்மென் லொவ்சன், பிரட் லீ மற்றும் ஸ்டூவர்ட் மெக்கில் ஆகியோரின் விக்கட்டை முதல் இனிங்ஸில் அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றி இரண்டாவது இனிங்ஸில் அவர் வீசிய முதல் பந்தில் ஜெஸ்டின் லெங்கரின் விக்கட்டைக் கைப்பற்றி ஹெட்ரிக்கைப் பெற்றார்.

1889ஆம் ஆண்டு – ஹேர்பி டெய்லரின் பிறப்பு

தென்ஆபிரிக்க அணியின் முன்னாள் முதல்தர தலை சிறந்த துடுப்பாட்ட வீரரான ஹேர்பி டெய்லரின் பிறப்பு. தென்ஆபிரிக்கா அணிக்காக 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2936 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் 07 சதங்கள் மற்றும் 17 அரைச் சதங்கள் அடங்கும். அவர் பெற்ற அதிக பட்ச ஓட்டம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 176 ஓட்டங்கள். அவரது துடுப்பாட்ட சராசரி 40.77.

மே மாதம் 05ஆம் திகதியில் பிறந்த வேறு வீரர்கள்

1909 கிரேஸ் மோர்கன் (இங்கிலாந்து)
1927 சித் ஓலின் (தென் ஆபிரிக்கா)
1964 ஜிலென்டா ஹோல் (அவுஸ்திரேலியா)
1969 கரேன் லெ கொம்பர் (நியூசிலாந்து)