வைத்திய கட்டில்களை அன்பளிப்புச் செய்த நுவான் குலசேகர

42

கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸிற்கு எதிராக உதவும் மனிநேயப் பணிகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான நுவான் குலசேகரவும் இணைந்திருக்கின்றார். 

பங்களாதேஷ் பயிற்சியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மனித நேயப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இதில் ஒரு அங்கமாக இந்த வாரம் நுவான் குலசேகரவின் உதவி அமைந்திருக்கிறது.

அதன்படி கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த நுவான் குலசேகர, கொரோனா வைரஸ் நோயாளிகளை பராமரிக்கும் கம்பஹா பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி வைத்திய கட்டில்களை அன்பளிப்புச் செய்திருக்கின்றார்.

நுவான் குலசேகர, தான் அன்பளிப்புச் செய்யும் கட்டில்களை தானே முன்வந்து கம்பஹா பொது வைத்தியசாலையின் அதிகாரிகளிடம் நேற்று (16) கையளித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த வாரம் இந்த வைரஸிற்கு எதிரான போராட்டத்திற்கு இலங்கை அணியின் சைனமன் சுழல் பந்துவீச்சாளரன லக்ஷான் சந்தகனும் ஒரு தொகைப் பணத்தினை நன்கொடையாக வழங்கியிருந்தார்.

அதேநேரம் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன மற்றும் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட வீரர்களும் இந்த கொரோனா வைரஸிற்கு எதிராக போராட, முன்னர் பண நன்கொடை வழங்கிய நிலையில், தற்போதைய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வைத்திய உபகரணங்களை கொள்வனவு செய்ய நிதி உதவி  வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் ஏற்பட்டது இலங்கை அடங்லாக உலகிற்கு மிகப் பெரிய பாதிப்பு என்ற போதிலும், இத்தருணத்தில் கிரிக்கெட் வீரர்களின் மனித நேயப் பண்புகள் வெளிப்படுவதற்கான ஒரு சந்தர்ப்பமும் உருவாகியிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையே.

>> மேலும்  பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<