ஐ.பி.எல். தொடரில் விளையாடாதது பாகிஸ்தான் டி20 அணிக்கு பாதிப்பு – ஆர்தர்

544
Mickey Arthur

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கியது. 2008ஆம் ஆண்டு தொடங்கும் போது இந்தத் தொடர் இவ்வளவு பெரிய அளவில் வெற்றிபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா அகிய நாடுகள் ஐ.பி.எல். தொடர் நடத்தும் போது பெரும்பாலும் சர்வதேச தொடருக்கு ஆர்வம் காட்டுவதில்லை.

முதல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவில் விரிசல் விழுந்ததால் பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது.

தற்போது அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஐ.பி.எல். தொடரில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் விலகி இருப்பது பாகிஸ்தானின் டி20 கிரிக்கெட் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நடத்திய சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான ஆர்தர் இதுபற்றிக் கூறுகையில், ‘‘பல்வேறு அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரில் இருந்து ஏராளமானவற்றை கற்றுக்கொள்ளலாம். இதுபோன்ற தொடர் சர்வதேசப் போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஐ.பி.எல். தொடரில் விளையாடாமல் இருப்பது, பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் ஆட்டத்திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தான் அணி வேகப்பந்து மற்றும் சுழற்பந்து ஆகியவற்றில் சிறப்பான நிலையில் உள்ளது”  என்றார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்