ஆமிர் தொடர்பில் தப்பான எண்ணம் இல்லை – ப்ரோட்

287

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முஹமத் ஆமிர் கலந்து கொள்வதால் எந்தவித  தவறான அபிப்பிராயமும் இல்லை என்று  இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் லோட்ர்ஸ் மைதானத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை யாராலும் மறக்க முடியாது. இந்தப் போட்டியின்போது மெட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான  முஹமத் ஆமிர் மற்றும் முஹமத் ஆசிப் ஆகியோரும், இடதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சல்மான் பட் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன் ஐந்தாண்டு தண்டனைகளும் அவர்களுக்குக் கிடைத்தது.

போட்டி நடைபெற்ற 2010ஆம் ஆண்டு முஹமத் ஆமிருக்கு 18 வயதுதான். தற்போது 24 வயதாகிறது. ஐந்தாண்டு தண்டனை காலம் முடிவடைந்த பின்னர் தற்போது சர்வதேச அணிக்குத் திரும்பியுள்ளார். ஏற்கனவே ஒருநாள் அணியில் இடம்பிடித்த ஆமிர் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தண்டனை காலத்திற்குப் பிறகு இடம்பிடித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற லோர்ட்ஸ் போட்டியில் ஆமிர் 28 ஓவர்கள் வீசி 84 ஓட்டங்களை  மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 நோபால், ஒரு வைடு வீசினார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 102 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 8ஆவது விக்கட்டுக்கு ஜொனதன் ட்ரொட் உடன் இணைந்து ஸ்டுவர்ட் ப்ரோட்  அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்து தொடரில் ஆமிர் திறமையாக செயற்படுவார் – அசார் அலி

ஸ்டுவர்ட் ப்ரோட் தனது டெஸ்ட் கிரிக்கட் வாழ்க்கையில் அதிக ஓட்டங்களைப் பெற்றார். இவர் 169 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். இவரது ஆட்டத்தால் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ப்ரோட் ஆட்ட நாயகன் விருதுபெற்றார்.

தற்போது ஆமிரை எதிர்த்து விளையாடும் நிலையில் ப்ரோட் உள்ளார். தடைக்காலம் முடிந்து சர்வதேச அணிக்காக திரும்பியுள்ள ஆமிர் குறித்து கூறுகையில் அவரது வருகையால் எனக்கு எந்தவித தவறான அபிப்பிராயம் இல்லை என்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஆமிருக்கெதிராக வீரர்களிடம் இருந்து தவறான அபிப்பிராயம் மற்றும் எதிர்மறையாக செயல்பாடுகள் வரும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், ரசிகர்கள் வேறுபட்ட நிலையில் இருக்கலாம். லோர்ட்ஸில் உணர்வுபூர்வமான கூட்டம் வரும். அவர்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த மனநிலையில் இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆமிர்  அவருடையை தவறுக்கான தண்டனை காலத்தை முடித்துவி்ட்டார் என்று நினைக்கிறேன். இதுபோன்ற தவறுதலுக்கு என்ன தண்டனை என்பதை ஐ.சி.சி. தங்களது வழிமுறைகளில் தெளிவாகக் கூறியுள்ளது. மக்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம்.

லோர்ட்ஸ் போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது சிறப்பான உணர்வு. நீங்கள் சிறந்த அணிக்கெதிராக விளையாட விரும்புவீர்கள். ஆமிர் எந்தவொரு பந்து வீச்சாளருக்கும் சலைத்தவர் அல்ல என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த 6 ஆண்டுகளாக ஆமிருக்கெதிராக விளையாடவில்லை. 2010 தொடரில் ஆமிர் தொடர் நாயகன் விருது பெற்றார். இது அவருடைய அபார ஸ்விங் பந்துக்கு கிடைத்தது” என்றார்.

2010ஆம் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் ஆமிர் 19 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது முக்கிய அம்சமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்