இந்தியா சென்றுள்ள தென்னாபிரிக்கா டெஸ்ட் குழாத்தில் வேகப்பந்து வீச்சாளரான லுன்கி ன்கிடி இணைக்கப்பட்டுள்ளார்.
>>இளையோர் உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது<<
தென்னாபிரிக்காவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ககிஸோ றபாடா விலா என்பு உபாதை காரணமாக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியிருக்கவில்லை. இந்த நிலையில், அவர் குவஹாட்டியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆடுவது சந்தேகம் என்பதனால் அவரின் பிரதியீடாக கருத்திற் கொள்ளப்பட்டு ன்கிடி இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
லுன்கி ன்கிடி இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இறுதியாக அவர் டெஸ்ட் சர்வதேச போட்டியொன்றில் இந்த ஆண்டின் ஜூன் மாதம் (ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி) பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முன்னர் குறிப்பிட்டது போன்று குவஹாட்டியில், நவம்பர் 22இல் ஆரம்பமாக ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் நடப்புச் சம்பியனான தென்னாபிரிக்கா இந்திய டெஸ்ட் தொடரில் 1-0 என ஏற்கனவே முன்னிலை அடைந்திருக்கின்மை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<



















