அடுத்த 5 வருடங்களுக்கு பார்சிலோனா அணியில் நெய்மார்

587
Neymar

பிரேசில் நாட்டின் இளம் கால்பந்து வீரர் நெய்மார், மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருக்கிறார். இதுதவிர பிரேசில் நாட்டில் உள்ள சான்டோஸ் கிளப்பில் இணைந்தும் விளையாடி வந்தார்.

பின்னர் அந்த கழகத்திற்கு 48.6 மில்லியன் பவுண்டுகள் வழங்கி 2013ஆம் ஆண்டு பார்சிலோனா அணி அவரை வாங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த அணிக்காக மிகச் சிறந்த முறையில் விளையாடி வருகிறார்.

முன்கள வீரரான நெய்மார், பார்சிலோனா அணிக்காக 93 லா லிகா போட்டிகளில் விளையாடி 55 கோல்கள் அடித்துள்ளார். நெய்மார் அணியில் இணைந்த பிறகு பார்சிலோனா இரண்டு முறை லா லிகா சாம்பியன், இரண்டு முறை கோபா டெல் ரெய் டிராபி மற்றும் 2014-15 சம்பியன்ஸ் லீக் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், நெய்மாரைக் கடந்த சில நாட்களாக மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் வாங்க முயற்சி செய்து வந்தன. நெய்மாரும் பார்சிலோனா அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், பார்சிலோனா நெய்மாரை இழக்க விரும்பவில்லை. இதனால் அவருக்கு அதிகபட்ச தொகையாக 167 மில்லியன் பவுண்டுகள் விலை நிர்ணயித்தது. அதன்பின் 186 மில்லியனாக உயர்த்தியது. இறுதியாக 209 மில்லியனாக உயர்த்தியது.

இந்த விலைக்கு வாங்க மற்ற அணிகள் கட்டாயம் தயங்கும் என்பதால் அதிக விலை நிர்ணயித்து நெய்மாரை ஐந்தாண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இவரது பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு நிறைவடைகிறது. இதற்கிடையில் தற்போது 2021 வரை அவரை ஒப்பந்தம் செய்துள்ளது பார்சிலோனா.

சான்டோஸ் அணியில் இருந்து விதிமுறைக்கு மாறாக நெய்மாரை வாங்கியதற்காக பார்சிலோனா அணி 4.3 மில்லியன் பவுண்டுகள் அபராதமாக செலுத்தியது குறி்ப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.