நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

87

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி இன்று (3) நடைபெற்றது. இந்தப் போட்டியில் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றியது.

Video – தெரிவுக்குழுவில் பிழையில்லை, வீரர்கள் முன்னேற வேண்டும் – Cricket Kalam 06

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் துடுப்பாட்டம், முன்னணி வீரர்களின்…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நான்காவது போட்டியை போன்று முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, ஒரு கட்டத்தில் 18 ஓட்டங்களை மாத்திரம் பெற்று நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. எனினும், 5வது விக்கெட்டுக்காக இணைந்த அம்பத்தி ராயுடு மற்றும் விஜய் சங்கர் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இருவரும் இணைந்து 98 ஓட்டங்களை பெற்றிருந்த போது சங்கர் 45 ஓட்டங்களுடன் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராயுடு 90 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்த்திக் பாண்டியா 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடங்களாக 45 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க இந்திய அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து  252 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் மெட் ஹென்ரி 4 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் ஆரம்ப மற்றும் மத்தியவரிசை வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. சிறப்பாக செயற்பட்ட இந்திய பந்து வீச்சாளர்கள் நியூஸிலாந்து அணியை 217 ஓட்டங்களுக்குள் சுருட்டியதன் மூலம் 35 ஓட்டங்களால் வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.

நியூஸிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் நீசம் அதிக பட்சமாக 44 ஓட்டங்களையும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் (39) மற்றும் டொம் லேத்தம் (37) ஓட்டங்கள் என பெற்றுக் கொண்டதை தவிர ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சஹால் மூன்று விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிதாலி ராஜ் புதிய சாதனை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும் துடுப்பாட்ட வீராங்கனையுமான மிதாலி ராஜ், நேற்று…

போட்டியின் ஆட்ட நாயகனாக அம்பத்தி ராயுடு தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் நாயகனாக மொஹமட் ஷமி தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச T20 தொடர் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா அணி – 252 (49.5) – ராயுடு 90, பாண்டியா 45, சங்கர் 45, ஹென்ரி 35/4, போல்ட் 39/3

நியூஸிலாந்து அணி – 217 (44.1) – நீசம் 44, வில்லியம்சன் 39, சஹால் 41/3, ஷமி 35/2, பாண்டியா 50/2

முடிவு : இந்திய அணி 35 ஓட்டங்களால் வெற்றி