2017 மற்றும் 2018 பருவகாலத்துக்கான வருடாந்த கிரிக்கெட் வீர்ரகள் ஒப்பந்தத்திற்கு உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற முதல்தர கிரிக்கெட் வீரர்கள் 103 பேரை ஒப்பந்தம் செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
18 இலங்கை வீரர்களுக்கே ஐ.பி.எல் இறுதி ஏலத்திற்கு வாய்ப்பு
இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்டு வருகின்ற ஐ.பி.எல்..
இதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 850 மில்லியன் ரூபா நிதியினை முதலீடு செய்யவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை மூலம் நேற்று (24) அறிவித்தது.
இதன்படி, 2016 – 17 பருவகாலத்தில் உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் இம்முறை ஒப்பந்தத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அந்தந்த கழகங்களினால் வழங்கப்படுகின்ற வீரர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக இப்புதிய சம்பளக் கொடுப்பனவு முறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, குறித்த காலப்பகுதியில் திறமைகளை வெளிப்படுத்திய முதல்தர கிரிக்கெட் வீரர்கள் 20 பேரும், உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து அதிக பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட வளர்ந்துவரும் 23 வீரர்களும் இப்புதிய ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அதேநேரம், 19 வயதுக்குட்பட்ட 29 வீரர்களும், முன்னாள் தேசிய வீரர்கள் 14 பேரும், தற்போது தேசிய அணியின் ஒப்பந்தத்தில் இடம்பெறாமல் தேசிய அணிக்காக அண்மைக்காலமாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருகின்ற 17 பேரும் இப்புதிய ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மாலிங்கவைப் போல பந்துவீசும் தமிழ்நாட்டு வீரர் அதிசயராஜ்
கிரிக்கெட் விளையாட்டில் வழக்கத்துக்கு மாறான…
இதேநேரம், இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கைச்சாத்திடப்படுகின்றது. இவ்வாறு வீரர்கள் ஒப்பந்தத்தில் இணைக்கப்படும்போது வீரர்களின் திறமை அடிப்படையில் ‘ஏ‘, ‘பி‘ மற்றும் ‘சி‘ என்று பிரிக்கப்படுகின்றனர். இதன்படி, தேசிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் உட்பட அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்குமான ஒப்பந்த விபரங்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2014ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் வருடாந்த ஒப்பந்தத்தில் 104 வீரர்கள் கைச்சத்தாத்திட்டனர். அதனையடுத்து புதிய நிர்வாகத்தின் கீழ் வீரர்களுக்கு இடையில் போட்டியை ஏற்படுத்தி அவர்களின் திறனை அதிகரிக்கும் நோக்கில் தேசிய அணியின் சம்பள ஒப்பந்த வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.