Home Tamil இரண்டாம் நாள் ஆதிக்கத்தையும் தமதாக்கிய இலங்கை கிரிக்கெட் அணி

இரண்டாம் நாள் ஆதிக்கத்தையும் தமதாக்கிய இலங்கை கிரிக்கெட் அணி

New Zealand tour of Sri Lanka 2024

28

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை அணி கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ் ஆகியோரது அபார சதங்களோடு முதல் இன்னிங்ஸில் இமாலய ஓட்டங்களை குவித்துள்ளது.  

அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த பிராவோ!

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தினையும் தினேஷ் சந்திமாலின் அபார சதத்தோடு தமதாக்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டநிறைவில் தமது முதல் இன்னிங்ஸிற்காக 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்கள் எடுத்தது 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் களத்தில் ஆட்டமிழக்காது நின்ற அஞ்செலோ மெதிவ்ஸ் 78 ஓட்டங்கள் பெற்றிருக்க, கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்கள் பெற்றிருந்தார் 

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த இலங்கை அணி போட்டியின் முதல் இடைவெளியில் அஞ்செலோ மெதிவ்ஸின் விக்கெட்டினைப் பறிகொடுத்தது. கிளன் பிலிப்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த மெதிவ்ஸ் 7 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்கள் எடுத்தார் 

மெதிவ்ஸின் பின்னர் சற்று நிதானத்தோடு ஆடிய தனன்ஞய டி சில்வா 44 ஓட்டங்களை குவித்தார். தனன்ஞயவின் விக்கெட்டினை பிலிப்ஸ் கைப்பற்ற இரண்டாம் நாளின் மதிய போசண இடைவேளை வந்தது. இலங்கை அணி இரண்டாம் நாள் மதிய போசண இடைவேளையினை 5 விக்கெட்டுக்களை இழந்து 402 ஓட்டங்களுடன் அடைந்தது

தொடர்ந்த ஆட்டத்தில் கமிந்து மெண்டிஸ் தன்னுடைய 5ஆவது டெஸ்ட் சதத்தினைப் பூர்த்தி செய்தார். அத்தோடு அவரோடு ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் உம் பொறுப்பான முறையில் ஆட இலங்கை அணி இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளையினை விக்கெட் இழப்பின்றி அடைந்தது. 

அதன் பின்னர் குசல் மெண்டிஸ் சதம் விளாச இலங்கை அணியானது இரண்டாம் நாளின் மூன்றாம் இடைவெளியில் 5 விக்கெட்டுக்களை இழந்து 602 ஓட்டங்கள் பெற்ற போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்தியது 

இலங்கை அணி ஆட்டத்தினை நிறுத்தும் போது குசல் மெண்டிஸ் தன்னுடைய 10ஆவது டெஸ்ட் சதத்தோடு 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 106 ஓட்டங்கள் ஆட்டமிழக்காது பெற்றார். அதேநேரம் கமிந்து மெண்டிஸ் 4 சிக்ஸர்கள் மற்றும் 16 பௌண்டரிகளோடு 182 ஓட்டங்கள் எடுத்தார். இந்த இரண்டு வீரர்களும் இலங்கை அணியின் ஆறாம் விக்கெட் இணைப்பாட்டமாக 200 ஓட்டங்களையும் பகிர்ந்ததும் குறிப்பிடத்தக்கது 

இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டிக்கான பாக். குழாம் அறிவிப்பு

அத்துடன் இப்போட்டியில் பெற்ற 182 ஓட்டங்களோடு 1000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த கமிந்து மெண்டிஸ் இலங்கை சார்பில் இந்த சாதனையை மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் (13) மேற்கொண்ட வீரராகவும், டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் இந்த சாதனையினை அதிவேகமாக மேற்கொண்ட மூன்றாவது வீரராகவும் சாதனை நிலைநாட்டினார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் கிளன் பிலிப்ஸ் 3 விக்கெட்டுக்களையும், டிம் சௌத்தி ஒரு விக்கெட்டினையும் சாய்த்தனர் 

இலங்கையை அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த நியூசிலாந்து இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் கேன் வில்லியம்சன் 06 ஒட்டங்களையும், அஜாஸ் படேல் ஓட்டங்களின்றியும் காணப்படுகின்றனர் 

போட்டியின் சுருக்கம் 

Result


Sri Lanka
602/5 (163.4)

New Zealand
88/10 (39.5) & 360/10 (81.4)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Tom Blundell b Tim Southee 1 3 0 0 33.33
Dimuth Karunaratne run out (Tom Latham) 46 109 4 0 42.20
Dinesh Chandimal b Glenn Phillips 116 208 15 0 55.77
Angelo Mathews c William O’Rourke b Glenn Phillips 88 185 7 0 47.57
Kamindu Mendis not out 182 250 16 4 72.80
Dhananjaya de Silva c Tom Blundell b Glenn Phillips 44 80 3 1 55.00
Kusal Mendis not out 106 149 6 3 71.14


Extras 19 (b 6 , lb 8 , nb 2, w 3, pen 0)
Total 602/5 (163.4 Overs, RR: 3.68)
Bowling O M R W Econ
Tim Southee 19 1 70 1 3.68
William O’Rourke 17 1 81 0 4.76
Ajaz Patel 41 5 135 0 3.29
Mitchell Santner 33 5 82 0 2.48
Glenn Phillips 38 4 141 3 3.71
Rachin Ravindra 12.4 0 54 0 4.35
Daryl Mitchell 3 0 25 0 8.33
Batsmen R B 4s 6s SR
Tom Latham c Pathum Nissanka b Asitha Fernando 2 5 0 0 40.00
Devon Conway c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 9 21 0 0 42.86
Kane Williamson c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 7 53 0 0 13.21
Ajaz Patel lbw b Nishan Peiris 8 41 0 0 19.51
Rachin Ravindra b Nishan Peiris 10 25 1 0 40.00
Daryl Mitchell c Angelo Mathews b Prabath Jayasuriya 13 15 1 1 86.67
Tom Blundell c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 1 5 0 0 20.00
Glenn Phillips c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 0 2 0 0 0.00
Mitchell Santner b Nishan Peiris 29 51 4 1 56.86
Tim Southee c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 2 6 0 0 33.33
William O’Rourke not out 2 15 0 0 13.33


Extras 5 (b 5 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 88/10 (39.5 Overs, RR: 2.21)
Bowling O M R W Econ
Asitha Fernando 4 1 8 1 2.00
Nishan Madushka 17.5 3 33 3 1.89
Prabath Jayasuriya 18 6 42 6 2.33


Batsmen R B 4s 6s SR
Tom Latham c Pathum Nissanka b Nishan Peiris 0 6 0 0 0.00
Devon Conway c Dinesh Chandimal b Dhananjaya de Silva 61 62 10 1 98.39
Kane Williamson c Ramesh Mendis b Nishan Peiris 46 58 4 0 79.31
Rachin Ravindra b Nishan Peiris 12 24 1 0 50.00
Daryl Mitchell c Pathum Nissanka b Prabath Jayasuriya 1 5 0 0 20.00
Tom Blundell lbw b Nishan Peiris 60 64 6 2 93.75
Glenn Phillips c Dimuth Karunaratne b Nishan Peiris 78 99 6 3 78.79
Mitchell Santner st Kusal Mendis b Nishan Peiris 67 115 6 3 58.26
Tim Southee b Prabath Jayasuriya 10 10 1 1 100.00
Ajaz Patel b Prabath Jayasuriya 22 40 3 1 55.00
William O’Rourke not out 0 7 0 0 0.00


Extras 3 (b 0 , lb 2 , nb 0, w 1, pen 0)
Total 360/10 (81.4 Overs, RR: 4.41)
Bowling O M R W Econ
Nishan Peiris 33.4 4 170 6 5.09
Prabath Jayasuriya 34 2 139 3 4.09
Asitha Fernando 5 1 14 0 2.80
Milan Rathnayake 2 0 7 0 3.50
Dhananjaya de Silva 7 0 28 1 4.00



 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<