இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை பதினொருவர் அறிவிப்பு

New Zealand tour of Sri Lanka 2024

44

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை பதினொருவர் விபரம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார மற்றும் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அதிரடி முன்னேற்றம்

ரமேஷ் மெண்டிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் நிசான் பீரிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் முதன் முறையாக தேசிய அணியில் பெயரிடப்பட்டுள்ளார். 

அதேநேரம் இங்கிலாந்து தொடரில் பந்துவீச்சுடன் துடுப்பாட்டத்திலும் சோபித்த மிலான் ரத்நாயக்க மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மிலான் ரத்நாயக்க லஹிரு குமாரவுக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்டுள்ளார் 

அணியின் துடுப்பாட்டத்தை சற்று வலுப்படுத்தும் நோக்கில் மிலான் ரத்நாயக்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய லஹிரு குமாரவுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணி 

 

திமுத் கருணாரத்ன, பெதும் நிஸ்ஸங்க, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, குசல் மெண்டிஸ், நிசான் பீரிஸ், மிலான் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, அசித பெர்னாண்டோ 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<