ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீர, வீராங்கனைகளாக இலங்கையின் துனித் வெல்லாலகே மற்றும் ஹர்சிதா சமரவிக்ரம ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீர, வீராங்கனைக்கான பரிந்துரைகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், வெற்றியாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
>>ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர்கள் பரிந்துரையில் வெல்லாலகே!<<
இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் வெளிப்படுத்திய பிரகாசிப்பின் அடிப்படையில் துனித் வெல்லாலகே முதன்முறையாக ஐசிசியின் மாதத்திற்கான சிறந்த வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரருக்காக மேற்கிந்திய தீவுகளின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் தென்னாபிரிக்காவின் கேஷவ் மஹாராஜ் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்த நிலையில், துனித் வெல்லாலகே இந்த விருதினை வென்றுள்ளார்.
அதேநேரம் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் பிரகாசித்திருந்த இலங்கை மகளிர் அணியின் வீராங்கனை ஹர்சிதா சமரவிக்ரமவும் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் ஆடவர் மற்றும் மகளிர் அணி வீர, வீராங்கனைகள் ஒரே மாதத்தில் ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெறுவது இதுவே முதன்முறையாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<