கிரிக்கெட் பயிற்சிகளை மீண்டும் ஆரம்பித்துள்ள நியூசிலாந்து

187

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீர வீராங்கனைகள் கொரோனா வைரஸ் காரணமாக உருவாகியிருந்த நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகக் கிண்ணம் வென்றால் திருமணம் முடிப்பேன் – ரஷீட் கான்

அந்தவகையில் லிங்கன் நகரில் அமைந்திருக்கும் கிரிக்கெட் பயிற்சிகளுக்கான உயர்செயன்திறன் நிலையத்திலேயே (High Performance Center) நியூசிலாந்து அணி வீர வீராங்கனைகளின் பயிற்சிகள் நடைபெறுகின்றன. 

கொரோனா வைரஸினை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்த நாடுகளில் ஒன்றாக நியூசிலாந்து காணப்படுகின்றது. அந்நாட்டில், கிட்டத்தட்ட 1,500 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட போதும் அதில் 1,400 பேர் வரை நோயிலிருந்து குணமடைந்திருந்தனர். இவ்வைரஸ் காரணமாக நியூசிலாந்தில் 22 இறப்புச் சம்பவங்கள் பதிவாகிய போதும் தற்போது அங்கே வைரஸ் பிரச்சினை முற்று முழுதாக இல்லாமல் போயிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறாக ஒரு சாதக சூழல் உருவாகிய காரணத்தினாலேயே நியூசிலாந்தின் வீர வீராங்கனைகள் தங்களது கிரிக்கெட் பயிற்சிகளை மீள ஆரம்பித்திருக்கின்றனர். 

அதேநேரம், நியூசிலாந்து கிரிக்கெட் சபை (NZC) தமது வீர வீராங்கனைகளுக்கான பயிற்சிகள் ஆறு முகாம்கள் அமைக்கப்பட்டு கட்டம் கட்டமாக நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கின்றது. 

”இந்த வாரம் தொடக்கம் லிங்கனில் அமைந்துள்ள உயர் செயற்திறன் நிலையத்தில் நியூசிலாந்தின் முன்னணி வீர வீராங்கனைகள் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளனர். (மறுமுனையில்) குளிர்கால மாதங்களை கருத்திற்கொண்டு ஆறு முகாம்களும் (கிரிக்கெட் பயிற்சிகளுக்காக) திட்டமிடப்பட்டுள்ளன.” என நியூசிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர்

மறுமுனையில் எதிர்வரும் 19ஆம் திகதி மவுன்ட் மங்னாய் நகரில் ஆரம்பமாகவுள்ள பயிற்சி முகாம் ஒன்றில் நியூசிலாந்தைச் சேர்ந்த அனைத்து கிரிக்கெட் வீரர்களும் அழைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அதேவேளை நியூசிலாந்தினை அண்டிய நாடான அவுஸ்திரேலியாவும் தங்களது கிரிக்கெட் வீர வீராங்கனைகளுக்கான பயிற்சிகளை நியூசிலாந்துக்கு முன்னரே ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<