கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர்

131

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சேத்தன் சௌஹானுக்கு கொவிட் – 19 எனப்படும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதகாலமாக ஒட்டுமொத்த உலகையும் புரட்டி போட்டுள்ள கொரோனா என்னும் கொடிய நோய், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.  

சஹீட் அப்ரிடிக்கு கொவிட்-19 தொற்று

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 9 இலட்சத்தை நெருங்கிவிட்டது.   

இந்த நிலையில், இந்த கொரோனா வைரஸானது கிரிக்கெட் வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. பாகிஸ்தான் வீரர்களான சஹீட் அப்ரிடி, ஜபர் சர்பராஸ், தௌபீக் உமர், ஸ்கொட்லாந்து அணியின் மஜீத் ஹக், பங்களாதேஷ்  அணியின் ஷ்ரபி மொர்தசா, நபீஸ் இக்பால் உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், உத்திரபிரதேசத்தின் விளையாட்டு துறை அமைச்சருமான சேத்தன் சௌஹானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

கொரோனா உறுதி செய்யப்பட்ட சேத்தன் சௌஹான் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நோய் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை

இந்தியாவில் முதன் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் கிரிக்கெட் வீரர் சேத்தன் சௌஹான் தான் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது 72 வயதான சேத்தன் சௌஹான், கடந்த 1969ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார். அவர் 1981ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியிருந்தார்

அத்துடன், இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 7 ஒருநாள் போட்டிகளில் சேத்தன் சௌஹான் ஆடி உள்ளார். இவர் சுனில் கவாஸ்கருடன் இணைந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடியவர்.   

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காமல், 2,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் ஆவார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மஹாராஷ்டிரா, டில்லி அணிகளுக்காக இவரது பங்களிப்பு மிக வலுவானதாக காணப்பட்டது.   

தென்னாபிரிக்கா கிரிக்கெட்டில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ்

அதிலும் குறிப்பாக, சர்வதேச கிரிக்கெட்டில், சக வீரருடனான இவரது இணைப்பாட்டம், எதிரணிக்கு பெரும்நெருக்கடியை அளித்து வந்தது. இதில் சுனில் கவாஸ்கருடன் இணைப்பாட்டமாக, 59 போட்டிகளில் 3,022 ஓட்டங்களை எடுத்திருந்தார்

ஓய்வுக்குப் பின் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகத்திலும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். அத்துடன், 1990ஆம் ஆண்டில் இந்திய மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உத்தரபிரதேச அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க