இன்று (16) இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையில் நடைபெற்ற மகளிர் T20 உலகக் கிண்ண மோதலில் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை A குழாம் அறிவிப்பு
அத்துடன் இப்போட்டியில் கிடைத்த வெற்றி ஆஸி. அணிக்கு மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் கிடைத்த மூன்றாவது தொடர் வெற்றியாக மாற, இலங்கை வீராங்கனைகள் இம்முறைக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் முதல் தோல்வியினைப் பதிவு செய்திருக்கின்றனர்.
மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் குழு A அணிகளான நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் தொடரில் தாம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியினைப் பதிவு செய்த நிலையில், இன்று போர்ட் எலிசெபத் நகரில் வைத்து பலப்பரீட்சை நடாத்தியிருந்தன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸி. மகளிர் அணித் தலைவி மெக் லன்னிங் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீராங்கனைகளுக்கு வழங்கினார்.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் வீராங்கனைகள் ஆரம்பம் முதலே தடுமாறியதோடு 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்தனர்.
இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹர்சித மாதவி அதிகபட்சமாக 34 ஓட்டங்கள் எடுத்தார்.
மறுமுனையில் ஆஸி. மகளிர் அணி பந்துவீச்சில் மெகன் ஸ்சூய்ட் 4 விக்கெட்டுக்களையும், கிரேஸ் ஹர்ரிஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்யணயிக்கப்பட்ட 115 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி போட்டியின் வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி 15.5 ஓவர்களில் 113 ஓட்டங்களுடன் அடைந்தது.
அவுஸ்திரேலிய மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை உறுதி செய்த ஆரம்ப வீராங்கனைகள் இருவரும் அரைச்சதம் கடந்தனர். இதில் பெத் மூனி 53 பந்துகளில் 7 பெளண்டரிகள் உடன் 56 ஓட்டங்கள் எடுக்க, அலீஷா ஹீலி 43 பந்துகளில் ஒரு சிக்ஸர் 6 பெளண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காது இருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகி விருது ஆஸி. வீராங்கனையான அலீஷா ஹீலிக்கு வழங்கப்பட்டது.
மே.தீவுகள் அணியின் புதிய தலைவர்களாகும் ஹோப், பவெல்!
அதேநேரம் இப்போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி, மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி வாய்ப்பினை அதிகரித்திருக்க, இலங்கை அரையிறுதிக்கு தெரிவாக தமக்கு நியூசிலாந்து அணியுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெறும் லீக் போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்பார்த்திருக்கின்றது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Harshitha Samarawickrama | st Alyssa Healy b Grace Harris | 34 | 40 | 3 | 0 | 85.00 |
Chamari Athapaththu | c Grace Harris b Ellyse Perry | 16 | 16 | 2 | 1 | 100.00 |
Vishmi Gunaratne | c Ellyse Perry b Megan Schutt | 24 | 33 | 1 | 0 | 72.73 |
Oshadi Ranasinghe | c Tahlia McGrath b Grace Harris | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Anushka Sanjeewani | b Georgia Wareham | 8 | 9 | 1 | 0 | 88.89 |
Nilakshika Silva | not out | 15 | 7 | 2 | 0 | 214.29 |
Ama Kanchana | c Beth Mooney b Megan Schutt | 4 | 7 | 0 | 0 | 57.14 |
Malsha Shehani | st Alyssa Healy b Megan Schutt | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Sugandika Kumari | st Alyssa Healy b Megan Schutt | 4 | 3 | 1 | 0 | 133.33 |
Extras | 7 (b 0 , lb 3 , nb 0, w 4, pen 0) |
Total | 112/8 (20 Overs, RR: 5.6) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ashleigh Gardner | 2 | 0 | 14 | 0 | 7.00 | |
Darcie Brown | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
Megan Schutt | 4 | 0 | 24 | 4 | 6.00 | |
Ellyse Perry | 2 | 0 | 14 | 1 | 7.00 | |
Georgia Wareham | 4 | 0 | 20 | 1 | 5.00 | |
Grace Harris | 3 | 0 | 7 | 2 | 2.33 | |
Alana King | 4 | 0 | 22 | 0 | 5.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Alyssa Healy | b | 54 | 43 | 6 | 1 | 125.58 |
Beth Mooney | b | 56 | 53 | 7 | 1 | 105.66 |
Extras | 3 (b 0 , lb 0 , nb 1, w 2, pen 0) |
Total | 113/0 (15.5 Overs, RR: 7.14) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sugandika Kumari | 2 | 1 | 10 | 0 | 5.00 | |
Oshadi Ranasinghe | 3.5 | 0 | 28 | 0 | 8.00 | |
Malsha Shehani | 3 | 0 | 15 | 0 | 5.00 | |
Achini Kulasuriya | 2 | 0 | 22 | 0 | 11.00 | |
Inoka Ranaweera | 3 | 0 | 26 | 0 | 8.67 | |
Chamari Athapaththu | 2 | 0 | 12 | 0 | 6.00 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<