இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக் குழு விபரம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

1179
New cricket selection committee officially released

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டதன் பின்னர் இறுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக க்ரேம் லப்ரோய்

இலங்கை கிரிக்கெட் சபையானது க்ரேம் லப்ரோய் தலைமையில் 5 பேர் கொண்ட…

ஏற்கனவே வெளியிடப்பட்ட தகவலுக்கு அமைய, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ரஹம் லப்ரோயின் தலைமையின் கீழ் காமினி விக்ரமசிங்க, ஜெரி வெளடர்ஸ், அசன்க குருசிங்க மற்றும் சஜித் பெர்னாண்டோ ஆகியோர் புதிய தேர்வுக் குழு உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பிற்கு அமைய, ஏற்கனவே சனத் ஜயசூரியவின் தலைமையில் இருந்த தேர்வுக் குழுவில் அங்கம் வகித்த அசன்க குருசிங்க இந்தப் புதிய குழுவிலும் இடம்பெறுகின்றார். இதற்கமைய, அவர் இலங்கைக் கிரிக்கெட்டின் முகாமையாளர் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர் ஆகிய இரண்டு பதவிகளிலும் செயற்படவுள்ளார்.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவரும் வேகப்பந்து வீச்சாளருமான லப்ரோய், கடந்த 1986ஆம் ஆண்டு முதல் 1992ஆம் அண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை தேசிய அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளிலும், 44 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.  

ஜெரி வெளடர்ஸ், இலங்கை தேசிய அணியின் முகாமையாளராக செயற்பட்டுள்ளார். தற்பொழுது 44 வயதாகும் சஜித் பெர்னாண்டோ முதல்தரக் கிரிக்கெட் விளையாடியுள்ள முன்னாள் வீரர் என்பதுடன், பிரபலமான கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் அண்டு வரை இலங்கை அணியில் அங்கம் வகித்த முன்னாள் வீரரான காமினி விக்ரமசிங்க, இலங்கை அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளிலும் நான்கு ஒரு நாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

அடுத்த வாரம் ஐக்கிய அரபு இராட்சியத்தில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான இலங்கை அணியைத் தெரிவு செய்வதில் இருந்து இந்த புதிய தேர்வுக்குழு தமது பணியை ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

இம்மாதம் 28ஆம் திகதி முதல் இலங்கை அணியுடன் ஐக்கிய அரபு இராட்சியத்தில்…

பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் 3 T20I போட்டிகளைக் கொண்ட தொடர்களில் பங்கு கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்து ஐக்கிய அரபு இராட்சியம் பயணமாகவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இறுதி T20I போட்டி லாஹூரில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய தேர்வுக் குழு

க்ரஹம் லப்ரோய் – தலைவர்
காமினி விக்ரமசிங்க
ஜெரி வெளடர்ஸ்
சஜித் பெர்னாண்டோ
அசன்க குருசின்க

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<