மஹேல, சங்காவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

914

இலங்கை முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, ரொஷான் மஹானாம மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோரால் சமர்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய மறுசீரமைக்கப்பட்ட கிரிக்கெட் யாப்பு யோசனையை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் நேற்று (23) சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை 16 பேர் குழாம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான….

“மஹேல, சங்கக்கார, ரொஷான் மஹனாம மற்றும் சிதத் வெத்தமுனி உள்ளிட்ட சிரேஷ் வீரர்கள் சிலரை இணைத்துக்கொண்டு தயாரிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் எம்மிடம் இருந்தன. அந்த அறிக்கையை நாம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம்.

உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றதால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பை மறுசீரமைப்பதற்கான முன்னெடுப்புகளை நாங்கள் சற்று நிறுத்தி வைத்திருந்தோம். அதிலும் குறிப்பாக, இதற்குமுன் இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர்களும், முன்னாள் இடைக்கால நிர்வாக சபைகளும், இலங்கை கிரிக்கெட் யாப்பினை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக .சி.சியின் பல தடவைகள் வாக்களித்திருந்தனர்

எனவே, தற்போது உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளதால் மஹேல உள்ளிட்ட முன்னாள் வீரர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய அறிக்கையை (நேற்று மாலை 3.15 மணியளவில்) நான் பாராளுமன்ற பொதுச்செயலாளரிடம் சமர்பித்தேன்

பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய அறிக்கையொன்று சமர்பிக்கப்பட்டவுடன் அது பாராளுமன்ற வாசிகசாலையில் வைக்கப்படும். இதை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் எடுத்து படிக்கலாம். இதில் உள்ள யோசனைகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்

மாற்றங்களுடனான இலங்கை அணியின் பயணம் : Cricket Kalam 24

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை….

அதேபோல, பாராளுமன்ற சபாநாயகரிடம் இதுதொடர்பில் விவாதமொன்றை வழங்கும்படியும் நான் கோரிக்கை விடுத்தேன். இந்த கோரிக்கை கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பேசப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்பது பற்றியும், அதற்காக திகதியை எப்போது வழங்கலாம் என்பது பற்றியும் தீர்மானிக்கப்படும்

அதேபோல, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற ஒவ்வொரு கட்சிக்ளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தெரிவுக் குழுவொன்றை அமைத்து இந்த அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்

அதன்பிறகு, அமைச்சரவைக்கு இந்த அறிக்கையை சமர்பித்து அனுமதியைப் பெற்றுக்கொண்ட பிறகு புதிய யாப்பாக இதை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

மேலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கும் இதன்போது எம்முடன் ஒன்றுசேர்ந்து தமது திருத்தங்கள் தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதேபோல, .சி.சிக்கும் இந்த அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தவும், அதன் உள்ளடக்கம் குறித்து தெரியப்படுத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என அவர் குறிப்பிட்டார்

குலசேகரவுக்கு பிரியாவிடையாக அமையவுள்ள பங்களாதேஷுடனான 3ஆவது ஒருநாள் போட்டி

பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ள 3ஆவது ஒருநாள்….

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ஒவ்வொரு சங்கங்களினதும் யாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தலையிடுவதற்கு பூரண அனுமதி உண்டு. எனவே, இது ஏனைய சங்கங்களைப் போல இலங்கை கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். இதில் எந்தவொரு அரசியல் தலையீடுகளும் கிடையாது. நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இன்னும் 6 மாதங்கள் இருப்பேன். ஆனால் இந்நாட்டின் கிரிக்கெட் எப்போதும் இருக்கும்

ஆகவே, உலகக் கிண்ணம் நடைபெறுவதற்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன. அதற்கு இப்போது முதல் நாங்கள் தயாராக வேண்டும். கடைசித் தருவாயில் மேற்கொள்கின்ற மாற்றங்கள் ஏமாற்றத்தையே பெற்றுக்கொடுக்கும். அந்த பிரதிபலனை தான் நாம் இம்முறை உலகக் கிண்ணத்தில் பெற்றுக்கொண்டோம்.

அத்துடன், இந்நாட்டின் கிரிக்கெட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும், அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் நாங்கள் முன்வைத்துள்ள இந்த அறிக்கை நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டில் சிறந்ததொரு முன்னேற்றத்தைக் கொடுக்கும் என தான் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

இலங்கையின் பாதுகாப்பை புகழ்ந்த தமிம் இக்பால்

இலங்கையில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் பங்களாதேஷ்….

இலங்கை கிரிக்கெட் யாப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும், கிரிக்கெட் நிறுவனத் தேர்தலின் போது கழகங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர்களால் கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டு வந்தன.  

இதன்படி, மஹேல சங்கக்கார, ரொஷான் மஹனாம மற்றும் சிதத் வெத்தமுனி உள்ளிட்ட சிரேஷ் வீரர்களால் கிரிக்கெட் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பான விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சிடம் கையளிக்கப்பட்டது

தற்போதை விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள ஹரீன் பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட் யாப்பு விரைவில் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்

அத்துடன், எந்தவொரு இடைக்கால நிர்வாக சபையையும் நியமிக்கப் போவதில்லை என தெரிவித்த அவர், அரசியல் தலையீடின்றி விளையாட்டை முன்னெடுத்துச் செல்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க