இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் பின்னரான புதிய ஒரு நாள் அணிகளின் தரப்படுத்தலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நேற்று (03) வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை பறிகொடுத்த நியூஸிலாந்து அணி தற்போது தரவரிசையில் இரண்டு புள்ளிகளை இழந்து நான்காமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அங்கு நியூஸிலாந்து அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு வகையான (ஒருநாள், டி20) கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகின்றது.
நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா
நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்…
சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ஒருநாள் தொடர் நேற்றுடன் (03) நிறைவுக்கு வந்திருந்தது. இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி நியூஸிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலே வைத்து வீழ்த்தி 4-1 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினுடைய ஒருநாள் அணிகளின் தரப்படுத்தலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு அணியினுடைய வெற்றி மற்றும் இன்னொரு அணியினுடைய தோல்வி, தரவரிசையில் அதனை பின்தொடர்ந்தோ அல்லது முன்தொடர்ந்தோ காணப்படுகின்ற அணிகளினுடைய தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
அதன்படி இந்திய அணியினுடைய தொடர் வெற்றி தரவரிசையில் மாற்றத்தினை ஏற்படுத்தாவிட்டாலும், நியூஸிலாந்து அணியினுடைய தொடர் தோல்வி இன்னொரு அணியினுடைய தரவரிசையில் மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்திய அணி 121 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், நியூஸிலாந்து அணி 113 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் காணப்பட்டிருந்தது.
தற்போது நியூஸிலாந்து அணி ஒருநாள் தொடரை இழந்ததன் மூலம் இரண்டு புள்ளிகளை இழந்து 111 புள்ளிகளுடன் தரவரிசையில் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு நான்காமிடத்திலுள்ளது. அதேவேளை தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஒரு புள்ளியை மேலதிகமாக பெற்று இரண்டாமிடத்தை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளது.
தலை உபாதை பரிசோதனைக்கு முகம்கொடுத்துள்ள குசல் பெரேரா
அவுஸ்திரேலிய அணியுடனான…
பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரை 3-2 என்ற அடிப்படையில் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி தற்போது 111 புள்ளிகளை பெற்றுள்ள அதேவேளை நியூஸிலாந்து அணியும் தற்போது 111 புள்ளிகளை பெற்றுள்ளது. இருந்தாலும் ஐ.சி.சியினுடைய தசம புள்ளி கணிப்பீட்டின் படி தென்னாபிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒருநாள் அந்தஸ்து கொண்ட அணிகளினுடைய தரவரிசையில் குறைந்த வெற்றிகளையாவது புதிவு செய்து தரப்படுத்தலில் இடம்பெற்றுள்ள 15 அணிகளில் தற்போது இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
இந்திய – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் பின்னரான புதிய ஒருநாள் தரவரிசை (முதல் பத்து இடங்கள்)
- இங்கிலாந்து – 126 புள்ளிகள்
- இந்தியா – 122 புள்ளிகள்
- தென்னாபிரிக்கா – 111 புள்ளிகள்
- நியூஸிலாந்து – 111 புள்ளிகள்
- பாகிஸ்தான் – 102 புள்ளிகள்
- அவுஸ்திரேலியா – 100 புள்ளிகள்
- பங்களாதேஷ் – 93 புள்ளிகள்
- இலங்கை – 78 புள்ளிகள்
- மேற்கிந்திய தீவுகள் – 72 புள்ளிகள்
- ஆப்கானிஸ்தான் – 67 புள்ளிகள்
சுற்றுலா இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நாளை மறுதினம் (06) ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<