T-20 போட்டிகளின் புதிய தரவரிசை விபரங்கள்

1978
T-20 New Rankings

ஐசிசி நேற்றைய தினம் வெளியிட்டுள்ள புதிய T-20 தர வரிசைக்கு அமைவாக தென்னாபிரிக்க சூழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரை பின்தள்ளியுள்ள பாகிஸ்தான் அணி வீரர் இமாட் வசிம் T-20 பந்து வீச்சாளர்கள் தரவிரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பம் முதலே முதலிடத்தை தக்க வைத்திருந்த தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான மூன்று போட்டிகளை கொண்ட T-20 தொடரில் ஒரே ஒரு விக்கெட்டினை மாத்திரமே வீழ்த்தியிருந்ததன் காரணமாக புள்ளிகளை இழந்து மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் மற்றொரு வாய்ப்பைப் பெற்ற அதிரடி வீரர் அசேல

அதேநேரம், வெறும் 19 T-20 போட்டிகளில் மாத்திரம் இதுவரை விளையாடியுள்ள இமாட் வசிம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். இந்திய அணி வீரர் ஜஸ்பிரிட் பும்ரா இரண்டாவது இடத்திலும் தென்னாபிரிக்க அணியுடனான T-20 போட்டித் தொடரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய லியாம் ப்ளண்க்கட் 38ஆவது இடத்திலிருந்து 26 இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

துடுப்பாட்ட தர வரிசையில், இங்கிலாந்து அணிக்கெதிரான T-20 தொடரில் 73 ஓட்டங்களுக்கு மேல் சராசரியாக பதிவு செய்த எபி டி வில்லியர்ஸ் 12 இடங்கள் முன்னேறி 20ஆவது இடத்தை பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய அணித் தலைவர் விராத் கோலி தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஆரோன் பின்ச் மற்றும் கேன் வில்லியம்சன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலுள்ளனர்.

தென்னாபிரிக்க அணியுடனான T-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி தொடர்ந்தும் T-20 தரவரிசையில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த தர வரிசைப்படுத்தலின்போது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சமமான புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்டிருந்தது. எனினும், தற்பொழுது பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

ஐசிசி T-20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை (ஜூன் 26 திகதிக்கு அமைவாக)

நிலை அணி புள்ளிகள்
1 நியுசிலாந்து 125
2 இங்கிலாந்து 123 (+2)
3 பாகிஸ்தான் 121
4 இந்தியா 118
5 மேற்கிந்திய தீவுகள் 114
6 தென்னாபிரிக்கா 110 (-1)
7 அவுஸ்திரேலியா 110
8 இலங்கை 95
9 ஆப்கானிஸ்தான் 86
10 பங்களாதேஷ் 78

 

துடுப்பாட்ட வீரர்கள்

நிலை வீரர் நாடு புள்ளிகள்
1 Virat Kohli IND 799
2 Aaron Finch AUS 787
3 Kane Williamson NZ 745
4 Glenn Maxwell AUS 718
5 Joe Root ENG 699
6 Alex Hales ENG 674
7 Faf du Plessis SA 664
7 Mohammad Shahzad AFG 664
9 Hamilton Masakadza ZIM 657
10 Sabbir Rahman BAN 627

 

பந்து வீச்சாளர்கள்

நிலை வீரர் நாடு புள்ளிகள்
1 Imad Wasim PAK 780
2 Jasprit Bumrah IND 764
3 Imran Tahir SA 744
4 Rashid Khan AFG 717
4 Samuel Badree WI 717
6 Mustafizur Rahman BAN 695
7 James Faulkner AUS 688
8 Sunil Narine WI 652
9 Shakib Al Hasan BAN 648
10 Ravichandran Ashwin IND 644

 

சகலதுறை வீரர்கள்

நிலை வீரர் நாடு புள்ளிகள்
1 Shakib Al Hasan BAN 354
2 Glenn Maxwell AUS 344
3 Mohammad Nabi AFG 275
4 Marlon Samuels WI 271
5 Yuvraj Singh IND 210
6 Mahmudullah BAN 203
7 Peter Borren NED 202
8 Corey Anderson NZ 201
9 Sruesh. Raina IND 200
10 Dwayne Bravo WI 199