வெளிநாட்டில் மற்றொரு வாய்ப்பைப் பெற்ற அதிரடி வீரர் அசேல

1943

எதிர்வரும் பங்களாதேஷ் பிரிமியர் லீக் டி20 போட்டிகளில், கடந்த வருடம் குமார் சங்கக்காரவை பிரதிநிதித்துவப்படுத்திய அதே டாக்கா டைனமைட்ஸ் அணி இம்முறை இலங்கை அணியைச் சேர்ந்த அதிரடி மற்றும் சகலதுறை ஆட்டக்காரரான அசேல குணரத்னவை உள்வாங்க உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிகின்றன.

அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளுக்காக, சம்பியன் பட்டதை வென்ற மும்பாய் இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தாலும், அசேல குணரத்ன எவ்விதமான போட்டிகளிலும் விளையாடியிருக்கவில்லை. எனினும், அவ்வணியுடம் இணைந்து கொண்டு பெற்ற அனுபவம் சந்தேகமே இல்லாமல் அளவில்லாத பெறுமதி மிக்கதாகும்.

இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு தான் விண்ணப்பிக்கவில்லை – மஹேல

இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் மற்றும் துடுப்பாட்ட ஜாம்பவானுமாகிய..

கடந்தாண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் குமார் சங்கக்காரவின் 36 ஓட்டங்களின் பங்களிப்புடன் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய நடப்பு சம்பியன் டாக்கா டைனமைட்ஸ் அணி சார்பாக களமிறங்கவுள்ள போதிலும், அணியின் உத்தியோகபூர்வ அதிகாரிகள் இது சம்பந்தமாக எவற்றையும் உறுதிப்படுத்தவில்லை. எனினும், அவ்வணி உரிமையாளர்கள் அசேல குணரத்னவுடன் ஒப்பந்தமொன்றை செய்துள்ளனர்.

அசேல குணரத்ன, அண்மைய காலங்களில் டி20 போட்டிகளில் வளர்ந்து வரும் அதிரடி வீரராக கணிக்கப்படுகின்றார். சர்வதேச போட்டிகளில் அறிமுகம் பெற்றதிலிருந்து மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றார். 2016-17ஆம் ஆண்டுக்கான தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தின் போது திறமைகளை வெளிப்படுத்திய அதேநேரம் நம்பிக்கையூட்டும் வீரராகவும் வளர்ந்து வருகின்றார்.

அத்துடன், அவுஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டி20 போட்டிகளிலும் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு வழி நடத்தியிருந்த அதேவேளை அன்றிரவு உலக கிரிக்கெட் அரங்கில் அநேக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும், இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ், அண்மைய காலங்களில் அசேல குணரத்னவின் துடுப்பாட்டம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அதேவேளை எதிர்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதெனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம், டாக்கா டைனமைட்ஸ் அணி சார்பாக களமிறங்கவுள்ள ஏனைய வீரர்களாக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஷஹிட் அப்ரிடி, மொஹமட் அமீர் அவுஸ்திரேலிய அணி வீரர் ஷேன் வொட்சன் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழல் பந்து வீச்சாளரான சுனில் நரேன் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்காரவும் அவ்வணி சார்பாக களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம் – கிரிக் ட்ரக்கர்