ஆசிய மெய்வல்லுனர் தொடரில் ஹிமாஷ மற்றும் கயந்திகாவுக்கு 2 போட்டிகள்

17

கட்டாரின் டோஹா நகரில் உள்ள கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் நாளை மறுதினம் (21) ஆரம்பமாகவுள்ள 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள நிமாலி லியனாராச்சி தலைமையிலான இலங்கை அணி நேற்று (18) அதிகாலை கட்டாரை சென்றடைந்தது.

இந்த நிலையில், இம்முறை போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் பங்குபற்றவுள்ள நிகழ்ச்சிகளின் போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளதுடன், அதில் தெற்காசியாவின் அதிவேக குறுந்தூர ஓட்ட வீரரான ஹிமாஷ ஏஷான் மற்றும் தெற்காசிய உள்ளக மெய்வல்லுனர் தொடரில் 800 மீற்றர் ஓட்டத்தின் நடப்பு சம்பியனான கயன்திகா அபேரத்ன ஆகியோர் இரண்டு போட்டிகளில் களமிறங்கவுள்ளனர்.

ஆசிய மெய்வல்லுனரில் இலங்கை அணியை வழிநடத்தும் நிமாலி லியனாரச்சி

கட்டாரின் டோஹா நகரில் உள்ள கலீபா விளையாட்டரங்கில் இம்மாதம் 21ஆம் திகதி முதல்…

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரினை இலக்காகக் கொண்டு நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் (10.22 செக்.) இலங்கை சாதனை படைத்த ஹிமாஷ ஏஷான், போட்டி அட்டவiணியின் படி ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றவுள்ளார்.

இம்முறை போட்டித் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டி இரண்டாவது நாளில் நிறைவுக்கு வரவுள்ளது. அதன்பிறகு தான் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டி நடைபெறவுள்ளது. எனவே ஹிமாஷவை 200 மீற்றரிலும் களமிறக்குவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்மைக்காலமாக 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாத்திரம் கவனம் செலுத்தி வந்த ஹிமாஷ, இறுதியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு தனது அதிசிறந்த காலத்தைப் (21.17 செக்.) பதிவு செய்திருந்தார்.  எனினும், கடந்த வருடம் சுகததாச விளையாட்டரங்கில் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஓடி இலங்கை சாதனையாக பதிவுசெய்த (21.12 செக்.) அவரது காலம் காற்றின் வேகத்தினால் தவறவிடப்பட்டது.

ஹிமாஷவின் போட்டி அட்டவணை

Day 1Qatar TimeSL TimeEventGenderPhase
21st18:268.56pm100mMenRound 1
Day 2
22nd17:458.15pm100mMenSemi Final
22nd20:2010.50pm100mMenFinal
Day 3
23rd9:4012.10pm200mMenRound 1
23rd16:5517:25200mMenSemi Final
Day 4
24th17:488.18pm200mMenFinal

இதேவேளை, மத்திய தூர ஒட்டப் போட்டிகளில் இலங்கை அணியின் மற்றுமொரு நட்சத்திர வீராங்கனையான கயன்திகா அபேரத்ன, இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 800 மீற்றரில் பங்குபற்றவுள்ளார். எனினும், போட்டிகளின் நான்காவது நாளான 24 ஆம் திகதி நடைபெறவுள்ள பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் மாத்திரம் கவனம் செலுத்தி வருகின்ற கயன்திகா, 1500 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் அவ்வப்போது களமிறங்குவார். குறித்த போட்டியில் 4 நிமிடங்கள் 18.07 செக்கன்கள் அவரது தனிப்பட்ட அதிசிறந்த காலமாக இருந்தாலும், கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் 4 நிமிடங்கள் 20.22 செக்கன்களை அவர் பதிவு செய்திருந்தார்.

கயந்திகாவின் போட்டி அட்டவணை

Day 1Qatar TimeSL TimeEventGenderPhase
21st8:3011.00am800mWomenRound 1
Day 2
22nd18:589.28pm800mWomenFinal
Day 4
24th18:068.46pm1500mWomenFinal

இதேவேளை, போட்டித் தொடரின் ஆரம்ப நாளான ஞாயிறன்று நிமாலி லியனாராச்சி, கயன்திகா அபேரதன் (800 மீற்றர் முதல் சுற்று), கிரேஷன் தனன்ஞய (முப்பாய்ச்சல் தகுதிகாண் சுற்று), நதீசா ராமநாயக்க (400 மீற்றர் முதல் சுற்று), அஜித் பிரேமகுமார (400 மீற்றர் முதல் சுற்று), ஹிமாஷ ஏஷான் (100 மீற்றர் முதல் சுற்று), ஆகியோர் தத்தமது போட்டிகளில் களமிறங்கவுள்ளனர்.

ஆசிய மெய்வல்லுனர் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

கட்டாரின் டோஹா நகரில் அடுத்த மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 23ஆவது ஆசிய…

இலங்கையின் முதல் தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இம்முறை கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் குறித்த அறிக்கைககள், கட்டுரைகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளது.

 மேலும் சுவையான செய்திகளைப் படிக்க