உலக பதினொருவர் அணியில் முதல்முறை இடம்பெற்ற நேபாள வீரர்

1057

புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்த மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ள T20 போட்டியில் மோதவுள்ள உலக பதினொருவர் அணியில், நேபாள நாட்டின் 17 வயதுடைய சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சான்னே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.  

மேற்கிந்திய தீவுகள் – உலக பதினொருவர் இடையிலான T20 போட்டி மே மாதத்தில்

புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக லண்டன்…

இர்மா மற்றும் மரியா புயல் தாக்கியதில் மேற்கிந்திய தீவுகளின் 5 கிரிக்கெட் மைதானங்கள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகின. இந்த மைதானங்களை புனர்நிர்மாணம் செய்வதற்காக புயல் நிவாரண நிதி திரட்டும் வகையில் மேற்கிந்திய தீவுகள்உலக பதினொருவர் அணிகள் மோதும் T20 போட்டியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

வரலாற்று சிறப்புமிக்க லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இம்மாதம் 31ஆம் திகதி நடைபெற உள்ள இந்தப் போட்டிக்காக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் குழாமை கார்லோஸ் ப்ரத்வைட் தலைமை தாங்கவுள்ளார். இதேநேரம், அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஈவின் லூயிஸ் ஆகியோரோடு 2 வருடங்களுக்குப் பிறகு அன்ட்ரு ரசலும் மேற்கிந்திய தீவுகள் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்தின் அதிரடி ஆட்ட வீரர் இயன் மோர்கன் தலைமையிலான .சி.சி உலக பதினொருவர் அணியில் பங்களாதேஷ் அணி சார்பாக தமீம் இக்பால் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் சொந்த காரணங்களுக்காக இந்தப் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

அதிலும் குறிப்பாக, தற்போது நடைபெற்று வருகின்ற .பி.எல் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகின்ற அவர், எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகளுடனான போட்டித் தொடரை கருத்திற்கொண்டு சிறிது காலம் ஓய்வு பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த போட்டியில் பங்குபற்றுவதில்லை என அறிவித்துள்ளார்.

உலக பதினொருவர் அணியில் லூக் ரோன்ச்சி மற்றும் மெக்லெனகன்

இந்த மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்..

இந்நிலையில், அவருக்குப் பதிலாக மாற்று வீரராக நேபாள கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லாமிச்சான்னேவை உலக பதினொருவர் அணியில் இணைத்துக்கொண்டுள்ளதாக .சி.சி நேற்று (16) அறிவித்தது.

இதுதொடர்பில் லாமிச்சான்னே கருத்து வெளியிடுகையில், நேபாளத்தில் இருந்து முதல் முறையாக உலக பதினொருவர் அணியில் பங்கேற்க கிடைத்தமையை பெருமையாக நினைக்கிறேன். நேபாளத்தில் என்னைப் போன்ற ஏராளமான திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு மட்டுமே இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

நடப்பு .பி.எல் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வரும் சந்தீப் லாமிச்சான்னே மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.

அது மாத்திரமின்றி இம்முறை .பி.எல் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சந்தீப்பை 2.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்த போதிலும், கடந்த 10 போட்டிகளில் அவருக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற லீக் போட்டியில் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசிய லாமிச்சான்னே 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து பார்தீப் படேலின் விக்கெட்டை வீழ்த்தினார்.

முன்னதாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிணத்தில் நேபாள அணிக்காக களமிறங்கிய இவர் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.  

இதனையடுத்து கடந்த வருடம் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற எம்.சி.சி அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியிலும் விளையாடியிருந்த அவர், 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் நமீபியாவில் நடைபெற்ற உலக கிரிக்கெட் லீக் டிவிஷன் – 2 போட்டித் தொடரில் நேபாள அணிக்காக விளையாடியிருந்த லாமிச்சான்னே, 13 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியதுடன், 2022 வரை நேபாள அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒரு நாள் அந்தஸ்த்தைப் பெற்றுக்கொடுக்கவும் முக்கிய காரணமாக இருந்தார்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<