Home Tamil திக்வெல்லவின் அபார சதத்தால் கண்டிக்கு ஆறுதல் வெற்றி

திக்வெல்லவின் அபார சதத்தால் கண்டிக்கு ஆறுதல் வெற்றி

National Super League 2023

353
National Super League 2023

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் இன்று (03) நடைபெற்ற கடைசி லீக் போட்டிகளில் தம்புள்ள மற்றும் கண்டி அணிகள் வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.

இதன்படி, இம்முறை போட்டித்தொடரில் 8 போட்டிகளில் 7இல் வெற்றிகளைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த மினோத் பானுக தலைமையிலான தம்புள்ள அணியும், 8 போட்டிகளில் 4இல் வெற்றியீட்டி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தைப் பிடித்த ஜனித் லியனகே தலைமையிலான ஜப்னா அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

மறுபுறத்தில் கண்டி மற்றும் கொழும்பு அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களையும் பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது.

இதனிடையே, இன்று நடைபெற்ற 2 கடைசி லீக் போட்டிகளில் ஜப்னா அணியின் ரவிந்து ரத்நாயக, தம்புள்ள அணியின் பவன் ரத்நாயக மற்றும் கண்டி அணியின் நிரோஷன் திக்வெல்ல ஆகிய மூவரும் சதமடித்தனர்.

அதேபோல, கொழும்பு அணியின் அஷேன் பண்டார, நிபுன் தனன்ஜய மற்றும் கண்டி அணியின் லஹிரு உதாரவும் அரைச் சதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

ஜப்னா எதிர் தம்புள்ள

கொழும்பு பி. சரா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ள அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை காட்டிய நிலையில், 80 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், பின்வரிசையில் வந்து வேகமாக ஆடிய ரவிந்து ரத்நாயக சதமடித்து கைகொடுக்க, ஜப்னா அணி 46.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஜப்னா அணியின் துடுப்பாட்டத்தில் ரவிந்து ரத்நாயக 5 சிக்ஸர்கள், 11 பௌண்டரிகள் அடங்கலாக 89 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்தார். தம்புள்ள அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் லஹிரு சமரகோன் ஆகிய தலா 3 விக்கெட்டுகளையும், நுவன் துஷார மற்றும் துஷான் ஹேமன்த ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மினோத் பானுக 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கமிந்து மெண்டிஸ் 14 ஓட்டங்களுடனும், லசித் அபேரட்ன 10 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

அதன்பிறகு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயகவுடன் ஜோடி சேர்ந்த சொனால் தினூஷ நிதானமாக ஓட்டங்களைக் குவித்து நம்பிக்கை கொடுத்தனர். எனினும், சொனால் தினூஷ 38 ஓட்டங்களை எடுத்த நிலையில் வெளியேற சீரற்ற காலநிலையால் போட்டி நிறுத்தப்பட்டது. இதன்போது தம்புள்ள அணி 37 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்திருந்தது.

எனவே, போதிய வெளிச்சமிண்மை காரணமாக தொடர்ந்து போட்டியை தொடர முடியாத நிலையில் டக்வர்த் லுவிஸ் முறையில் முடிவு நிர்ணயிக்கப்பட்டது. இதன்மூலம் போட்டியில் முன்னிலையில் இருந்த தம்புள்ள அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

தம்புள்ள அணி சார்பில் அதிகபட்சமாக பவன் ரத்நாயக 102 பந்துகளில் 104 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். பந்துவீச்சில் லஹிரு மதுசங்க, ரவீன் டி சில்வா, திலும் சுதீர மற்றும் யசிரு றொட்ரிகோ ஆகிய நால்வரும் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இந்தப் போட்டியில் நடப்புச் சம்பியனான ஜப்னா அணி தோல்வியைத் தழுவினாலும், எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த இதே தம்புள்ள அணியுடன் ஜப்னா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Result


Team Dambulla
186/4 (37)

Team Jaffna
233/10 (46.1)

Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana c Minod Bhanuka b Asitha Fernando  4 7 0 0 57.14
Nishan Madushka c Sonal Dinusha b Nuwan Thushara 20 20 4 0 100.00
Kasun Abeyratne c Ashan Priyanjan b Asitha Fernando  18 11 2 1 163.64
Janith Liyanage c & b Lahiru Samarakoon 3 14 0 0 21.43
Avishka Tharindu b Lahiru Samarakoon 2 4 0 0 50.00
Lahiru Madushanka c Lahiru Samarakoon b Asitha Fernando  11 22 0 1 50.00
Raveen De Silva b Lahiru Samarakoon 13 33 1 0 39.39
Ravindu Fernando  c Kamindu Mendis b Nuwan Thushara 100 89 11 5 112.36
Dilum Sudeera  c Minod Bhanuka b Dushan Hemantha 16 31 0 0 51.61
Jeffrey Vandersay  b Dushan Hemantha 18 40 0 0 45.00
Yasiru Rodrigo not out 0 8 0 0 0.00


Extras 28 (b 4 , lb 10 , nb 0, w 14, pen 0)
Total 233/10 (46.1 Overs, RR: 5.05)
Bowling O M R W Econ
Asitha Fernando  6 0 31 3 5.17
Nuwan Thushara 7.1 0 41 2 5.77
Lahiru Samarakoon 10 2 41 3 4.10
Sonal Dinusha 8 0 23 0 2.88
Lakshan Sandakan 6 0 40 0 6.67
Dushan Hemantha 9 1 43 2 4.78


Batsmen R B 4s 6s SR
Minod Bhanuka b Yasiru Rodrigo 8 13 1 0 61.54
Pavan Rathnayake  not out 107 102 13 2 104.90
Kamindu Mendis c Avishka Tharindu b Lahiru Madushanka 14 23 2 0 60.87
Lasith Abeyrathne c Avishka Tharindu b Raveen De Silva 10 10 1 0 100.00
Sonal Dinusha c Ravindu Fernando  b Dilum Sudeera  38 54 3 0 70.37
Dushan Hemantha not out 7 20 0 0 35.00


Extras 2 (b 0 , lb 0 , nb 0, w 2, pen 0)
Total 186/4 (37 Overs, RR: 5.03)
Bowling O M R W Econ
Yasiru Rodrigo 6 0 41 1 6.83
Janith Liyanage 6 0 41 0 6.83
Navod Paranavithana 1 0 9 0 9.00
Dilum Sudeera  5 0 22 1 4.40
Lahiru Madushanka 3 0 13 1 4.33
Raveen De Silva 6 0 16 1 2.67
Ravindu Fernando  4 0 15 0 3.75
Jeffrey Vandersay  6 0 29 0 4.83




கொழும்பு எதிர் கண்டி

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அவிஷக் பெர்னாண்டோ ஒரு ஓட்டத்துடனும், சிதார கிம்ஹான் 9 ஓட்டங்களுடனும் வெளியேறியிருந்தனர். தொடர்ந்து வந்த லக்ஷித மானசிங்க 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

எனினும், மத்திய வரிசையில் களமிறங்கிய துஷான் விமுக்தி (31), அணித்தலைவர் நிபுன் தனன்ஜய (62) மற்றும் அஷேன் பண்டார (99) ஆகிய மூவரினதும் துடுப்பாட்ட பங்களிப்புடன் கொழும்பு அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்களை எடுத்தது.

இந்தப் போட்டித் தொடர் முழுவதும் கொழும்பு அணிக்கு துடுப்பாட்டத்தில் வலுச்சேர்த்த அஷேன் பண்டார, 98 பந்துகளில் 99 ஓட்டங்களை எடுத்து ஒரு ஓட்டத்தினால் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

கண்டி அணியின் பந்துவீச்சில் நிபுன் ரன்சிக 3 விக்கெட்டுகளையும், அம்ஷி டி சில்வா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஓசத பெர்னாண்டோ 19 ஓட்டங்களுடன் வெளியேற, தொடர்ந்து வந்த சந்துன் வீரக்கொடி 32 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

எனினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவுடன் ஜோடி சேர்ந்த லஹிரு உதார 3ஆவது விக்கெட்டுக்காக நிதானமாக ஓட்டங்களைக் குவித்து வலுச்சேர்க்க, அணித்தலைவர் திக்வெல்ல 81 பந்துகளில் 103 ஓட்டங்களை எடுத்து உதித் மதுஷானின் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

இந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக போட்டி நிறுத்தப்படும் போது கண்டி அணி 40.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 244 ஓட்டங்களை எடுத்திருந்தது.

எனவே, போதிய வெளிச்சமிண்மை காரணமாக தொடர்ந்து போட்டியை தொடர முடியாத நிலையில் டக்வர்த் லுவிஸ் முறையில் முடிவு நிர்ணயிக்கப்பட்டது. இதன்மூலம் போட்டியில் முன்னிலையில் இருந்த கண்டி அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் நிரோஷன் திக்வெல்ல 103 ஓட்டங்களையும், லஹிரு உதார ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். கொழும்பு அணியின் பந்துவீச்சில் உதித் மதுஷான் 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இம்முறை தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் 2ஆவது வெற்றியை கண்டி அணி பதிவுசெய்ய, கொழும்பு அணி 5ஆவது தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துக்கொண்டது.

Result


Team Kandy
244/4 (40.3)

Team Colombo
271/7 (50)

Batsmen R B 4s 6s SR
Avisha Fernando c Sandun Weerakkody b Amshi De Silva 1 5 0 0 20.00
Sithara Gimhana c Thanuka Dabare b Nipun Ransika 9 13 2 0 69.23
Dushan Vimukthi run out (Wanuja Sahan) 31 62 2 0 50.00
Lakshitha Manasinghe c Wanuja Sahan b Nipun Ransika 5 8 0 0 62.50
Ashen Bandara b Wanuja Sahan 99 98 7 3 101.02
Nipun Dhananjaya c Niroshan Dickwella b Nipun Ransika 62 78 3 1 79.49
Sachitha Jayathilake c Niroshan Dickwella b Amshi De Silva 15 19 1 0 78.95
Isitha Dew Wijesundara not out 19 13 2 0 146.15
Prabath Jayasuriya not out 5 6 0 0 83.33


Extras 25 (b 4 , lb 7 , nb 2, w 12, pen 0)
Total 271/7 (50 Overs, RR: 5.42)
Bowling O M R W Econ
Nipun Ransika 8 2 32 3 4.00
Amshi De Silva 9 0 59 2 6.56
Wanuja Sahan 10 0 44 1 4.40
Sachindu Colombage 10 0 45 0 4.50
Thanuka Dabare 6 0 42 0 7.00
Wanuja Sahan 2.3 0 9 0 3.91
Sandun Weerakkody 4.3 0 29 0 6.74


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella b Udith Madushan 103 81 12 4 127.16
Oshada Fernando c Avisha Fernando b Dushan Vimukthi 19 10 1 2 190.00
Sandun Weerakkody b Lakshitha Manasinghe 32 41 4 0 78.05
Lahiru Udara not out 53 68 3 1 77.94
Thanuka Dabare c Sithara Gimhana b Udith Madushan 0 3 0 0 0.00
Ahan Wickramasinghe not out 26 41 2 0 63.41


Extras 11 (b 4 , lb 4 , nb 1, w 2, pen 0)
Total 244/4 (40.3 Overs, RR: 6.02)
Bowling O M R W Econ
Nuwan Pradeep  7 0 30 0 4.29
Dushan Vimukthi 7 0 66 1 9.43
Isitha Dew Wijesundara 3 0 20 0 6.67
Lakshitha Manasinghe 5 0 35 1 7.00
Prabath Jayasuriya 10 0 42 0 4.20
Udith Madushan 5.3 0 27 2 5.09
Ashen Bandara 3 0 16 0 5.33




>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<