T20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை என்ன?

329

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகின்ற T20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகைகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தொடரில் வெற்றி பெறும் அணியானது T20 உலகக் கிண்ணத்திற்கான வெற்றிக்கேடயத்துடன் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி சுமார் 319 மில்லியன் ரூபா) பணப்பரிசாக தமது தாயகத்திற்கு கொண்டு செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் 4 மாற்றங்கள்!

மறுமுனையில், தொடரில் இரண்டாம் இடம் பெறும் அணி 800,000 அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி சுமார் 159.9 மில்லியன் ரூபா) பணப்பரிசாக பெறும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியுறும் இரு அணிகளும் தலா 400,000 அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி சுமார் 79 மில்லியன் ரூபா) பெற்றுக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 16 அணிகளுக்கும் மொத்தமாக 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி சுமார் 1119 மில்லியன் ரூபா)  பணப்பரிசாக பகிர்ந்தளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் கடந்த 2016ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தினைப் போன்று இந்த T20 உலகக் கிண்ணத்தின் சுபர் 12 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் ஒவ்வொரு வெற்றிக்கும் ஏற்ப குறித்த சுற்றுக்கான பணப்பரிசினை வெற்றி கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதன்படி, சுபர் 12 சுற்றில் விளையாடும் அணிகள் தாம் பெறும் ஒவ்வொரு வெற்றியின் மூலமும் 40,000 அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி சுமார் 7.9 மில்லியன் ரூபா) தங்களது தாயகத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

இதேநேரம் சுபர் 12 சுற்றில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத அணிகளுக்கு 70,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி சுமார் 13.9 மில்லியன் ரூபாய்) பணப்பரிசாக வழங்கப்படும் கூறப்பட்டிருக்கின்றது.

T20 உலகக் கிண்ணம் 2009; ‘DilsCoop’ மன்னன் டில்ஷானின் பொற்காலம்

மறுமுனையில் T20 உலகக் கிண்ணத்திற்கான முதல் சுற்றில் அணிகள் பெறும் வெற்றி ஒவ்வொன்றுக்கும் தலா 40,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி சுமார் 7.9 மில்லியன் ரூபா) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுவதோடு, முதல் சுற்றில் இருந்து வெளியேறும் அணிக்கும் 40,000 அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

T20 உலகக் கிண்ணத்திற்கான பணப்பரிசு தவிர T20 உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் அணிகளுக்கு, 2.30 நிமிடம் கொண்ட பான இடைவேளையும் (Drinks Break) ஒவ்வொரு இன்னிங்ஸின் நடுவில் வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) குறிப்பிட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<