வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நசீம் ஷா!

England tour of Pakistan 2022

166

பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷாவுக்கு, நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்துவரும் இரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> பங்களாதேஷில் கலக்கப் போகும் கமிந்து மெண்டிஸ்

சஹீன் ஷா அப்ரிடியின் உபாதை காரணமாக ஆசியக்கிண்ணம் முதல் இங்கிலாந்து தொடரின் முதல் போட்டிவரை அணியின் பந்துவீச்சை பலப்படுத்துவதற்கான வாய்ப்பை நசீம் ஷா பெற்றிருந்தார்.

இவ்வாறான நிலையில், நசீம் ஷாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளிலும் நீக்கப்படுவதுடன், நியூசிலாந்து தொடருக்காக இவர் முழுமையாக தயாராகிவிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இவர் விளையாட மாட்டார் என்ற விடயம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், இவருடைய பரிசோதனையின் அறிக்கையின் படி இறுதி தீர்மானத்தை வைத்தியர்கள் எடுப்பார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியானது, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு சென்று 7ம் திகதி முதல் 14ம் திகதிவரை போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், ஒக்டோபர் 23ம் திகதி இந்திய அணிக்கு எதிராக தங்களுடைய முதல் T20 உலகக்கிண்ண போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<