இந்தியாவுடனான டி20 தொடருக்கான குழாமில் மீண்டும் சுனில் நரேன்

440
©ESPNcricinfo

நடைபெற்று முடிந்த ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்து புள்ளிகளுடன் ஒன்பதாமிடத்தை பெற்று முதல் சுற்றுடன் வெளியேறிய மேற்கிந்திய தீவுகள் அணி தங்களது அடுத்தகட்ட கிரிக்கெட் பயணத்தில் இருதரப்பு தொடரில் இந்திய அணியை தங்களது சொந்த மண்ணில் சந்திக்கவுள்ளது.  

ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் ஆடவுள்ளது.  

டோனியை முழுமையாக இழந்து மேற்கிந்திய தீவுகள் செல்லவுள்ள இந்திய அணி

ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு ……..

அடுத்த மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள குறித்த சுற்றுப்பயணத்தின் அனைத்து தொடர்களுக்குமான இந்திய அணியின் குழாம் நேற்று முன்தினம் (21) வெளியிடப்பட்டிருந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியினுடைய முதலிரண்டு டி20 போட்டிகளுக்குமான 14 பேர் கொண்ட குழாம் இன்று (23) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.  

வெளியிடப்பட்டுள்ள குழாத்தின் அடிப்படையில் டி20 சர்வதேச போட்டிகளுக்கான அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படும் வகையில் கார்லஸ் ப்ரெத்வெயிட் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளராக திகழ்ந்துவந்த சுனில் நரேன் கடந்த 2017 செப்டம்பரிலிருந்து சர்வதேச அணியில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

ஆனால், தொடர்ந்தும் .பி.எல் போன்ற பிரபல்யமான லீக் தொடர்களில் விளையாடி வந்த 31 வயதுடைய சுழற் பந்துவீச்சாளரான சுனில் நரேன் இரண்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சர்வதேச அரங்கிற்கு டி20 போட்டி மூலமாக திரும்பவுள்ளார். கடந்த உலகக் கிண்ண தொடரிலும் நரேனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த ஒரு வருடமாக சர்வதேச அணியில் இடம் கிடைக்காமல் தவறவிடப்பட்டுவந்த சகலதுறை வீரர் கிரோன் பொலார்ட், தொடர்ந்தும் டி20 லீக் தொடர்களில் விளையாடிவந்த நிலையில் தற்போது இந்திய அணியுடனான டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் உலகக் கிண்ண தொடருக்கு தலைமை தாங்கிய ஜெசன் ஹோல்டர் டி20 குழாமில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஓய்வை அறிவித்த மாலிங்கவின் அதிரடி கருத்து

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ……..

மேற்கிந்திய தீவுகள் பி அணியின் தலைவரும், கயானா அணியின் விக்கெட் காப்பாளருமான 28 வயதுடைய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான அந்தோனி ப்ரெம்ப்லி முதல் முறையாக சர்வதேச அரங்கிற்கு அறிமுகமாகும் அடிப்படையில் டி20 குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கடந்த வருடம் டி20 சர்வதேச அறிமுகம் பெற்று மூன்று போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் இருந்த கரி பியர் மீண்டும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, கடந்த உலகக் கிண்ண தொடரின் போது உபாதை காரணமாக தொடரிலிருந்து இடைநடுவில் வெளியேறிய அதிரடி சகலதுறை வீரர் அண்ட்ரூ ரஸல் மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்பியுள்ளார். இருந்தும் சரியாக ஒரு வருடத்திற்குப் பின்னரே ரஸல் டி20 சர்வதேச குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த உலகக் கிண்ண தொடரின் போது ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தும், தனது ஓய்வை மீண்டும் புதுப்பித்துக்கொண்ட அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் கனடா டி20 லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதன் காரணமாக இந்திய அணியுடன் டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இலங்கை வளர்ந்து வரும் அணிக்காக துடுப்பாட்டத்தில் போராடிய சிராஸ்

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் வீரர்களுக்கு ………………

கிறிஸ் கெயிலின் வெற்றிடத்திற்காக, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டி20 போட்டியின் போது டி20 சர்வதேச அறிமுகம் பெற்ற இடது கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜோன் கெம்ப்பல் தொடர்ந்தும் விளையாடும் அடிப்படையில் டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார்

முதலிரண்டு டி20 சர்வதேச போட்டிகளுக்குமான குழாம்.

கார்லஸ் ப்ரெத்வெயிட் (அணித்தலைவர்), ஜோன் கெம்ப்பல், எவின் லுவிஸ், சிம்ரென் ஹிட்மெயர், நிக்கொலஸ் பூரண், கிரோன் பொலார்ட், ரொவ்மன் பொவெல், கிமோ போல், சுனில் நரேன், சில்டொன் கொட்ரெல், ஒசேன் தோமஸ், அந்தோனி ப்ரெம்ப்லி, அண்ட்ரூ ரஸல், கரி பியர் 

டி20 தொடருக்கான போட்டி அட்டவணை 

  • 3 ஆகஸ்ட்முதலாவது டி20 சர்வதேச போட்டிபுளோரிடா
  • 4 ஆகஸ்ட்இரண்டாவது டி20 சர்வதேச போட்டிபுளோரிடா 
  • 6 ஆகஸ்ட்மூன்றாவது டி20 சர்வதேச போட்டிகயானா

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<